பிரபல பாலிவுட் நடிகருடன் திரையில் தோன்றும் அட்லீ

பிரபல பாலிவுட் நடிகருடன் திரையில் தோன்றும் அட்லீ

ஜவான் படத்தின் மாபெரும் வெற்றியால் பாலிவுட் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள இயக்குநர் அட்லீ,தனது அடுத்தப் படத்தை சல்மான் கான் நடிப்பில் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.இந்தப் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்துக்காக நடிகர் கமல்ஹாசனை அணுகியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இதனிடையே,இயக்குநர் அட்லீ,தனது தயாரிப்பில் முதல் பாலிவுட் படமாக உருவாகியுள்ள பேபி ஜான் படத்தில்,சல்மான் கானுடன் இணைந்து கேமியோ செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2016ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் திரைக்கு வந்த படம் தெறி.அட்லீ முதன்முறையாக விஜய்யுடன் இணைந்த இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இப்படம்தான் தற்போது வேறொரு கதைக்களத்தில் ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் உருவாகியுள்ளது.அப்படத்தில் விஜய் நடித்த வேடத்தில் வருண் தவான் நடிக்க, சமந்தா ரோலில் கீர்த்தி சுரேசும், எமி ஜாக்சன் ரோலில் வாமிகாவும் நடித்துள்ளனர்.அட்லீ தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை 'கீ' படத்தை இயக்கிய காளீஸ் இயக்கியுள்ளார்.இந்தப் படம் வருகிற டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது

இந்த நிலையில்,பேபி ஜான் படத்தில் சல்மான் கானுடன் ஒரு காட்சிக்கு கேமியோ செய்யவுள்ளாராம் இயக்குநர் அட்லீ. ஏற்கனவே, ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் அட்லீ திரையில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com