"ஜவான் படம் எடுக்க முக்கிய காரணம் விஜய் தான்" அட்லி நெகிழ்ச்சி!

"ஜவான் படம் எடுக்க முக்கிய காரணம் விஜய் தான்" அட்லி நெகிழ்ச்சி!

'ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்  பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஷாரூக்கான், விஜய் சேதுபதி, இசை அமைப்பாளர் அனிருத், இயக்குனர் அட்லி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். ஜவான் படம் எடுக்க முக்கிய காரணம் தன்னுடைய அண்ணன் தளபதி விஜய் தான் காரணம்  என இயக்குனர் அட்லி உருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் கூறினார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. 

மும்பையில் ஒரு சில இடங்களில் இப்படத்துக்கான புக்கிங் திறக்கப்பட்ட 15 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியானது.  இந்த நிலையில்  படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை அடுத்த தாம்பரத்தில்  நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான், அட்லி, அனிருத், விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி  நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்தேன். ஜானு இல்லாத ராம் எங்கு இருக்கிறார்கள். ஆனால் அந்த பெண் அப்போது ஷாருக்கானை காதலித்தது. அதற்கு பழிவாங்க இத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை.. ஒருவழியாக படத்தில் ஷாருக்கானை பழிவாங்கிவிட்டேன்.என சிரித்து கொண்டே சொன்னது அனவரையும் சிரிப்பலையில் தள்ளியது. 
 
தொடர்ந்து இயக்குநர் அட்லி பேசுகையில், இந்த படம் இயக்க முக்கிய காரணம் என்னுடைய அண்ணன் என்னுடைய தளபதி விஜய்  தான் என்றார்.. ஷாருக்கான் தன் அப்பாவுக்கும் மேலானவர் என உருக்கமாக  கூறினார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேச நடிகர் ஷாருக்கான் மேடை ஏறிய போது அரங்கமே கர கோஷத்தால் அதிர்ந்தது. அப்போது அவருக்கே உரித்தான பாணியில் சிரிப்புடன் ஜவான் படத்தில் தன்னுடன் நடித்த சக நடிகர்கள் பற்றி நகைச்சுவையுடன் கூறினர். பின்னர் கமஹாசனுடன் நடித்த ஹே ராம், ரஜினி காந்துடன் நடித்த ரா ஒன் பாம் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்டார் .  படக்குழுவினர் ஒருவருக்கும் ஒரு பெயர் சொல்லி அழைத்த ஷாருக்கான் கலகலப்பான யோகி பாபு,  அட்டகாசமான விஜய் சேதுபதி, விறுவிறுப்பான ரூபன். வித்தைக்காரன் அனிருத். வசீகரமான நயன்தாரா ஆகியோருக்கு பட்ட பெயர் வைத்தார்.

நிகழ்ச்சியில் உச்சகட்ட ஹைலைட்டாக கம்ல்ஹாசன் வீடியோ காலில் லைவாக தோன்றி படக்குழுவிற்கு சர்ப்பரைஸ் அளித்தார். ஜவான் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறிய கமல், இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிப் பெறும் என்றார். மேலும், ஷாருக்கான் இந்திய அன்பின் அடையாளம் என கூறிய கமல் பாலிவுட் வரை சென்று படம் இயக்கியுள்ள அட்லீயையும் பாராட்டினார்

இதனை தொடர்ந்து, ஜவான் திரைப்படத்தின் டிரைலர் துபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் இன்று திரையிடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இயக்குனர் அட்லி, அவரது மனைவி பிரியா, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோர் துபாய் செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தனர்.அப்போது, இசையமைப்பாளர் அனிருத் உடன் ரசிகர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com