
பிவிஆர் திரையரங்கில் மூட்டைப் பூச்சிகள் கடிப்பதாக சினிமா பார்க்கச் சென்ற ரசிகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருமங்கலத்தில் உள்ள வி ஆர் வணிக வளாகத்தில் பிவிஆர் திரையரங்கம் உள்ளது. இத்திரையரங்கில் ஓபன்ஹைமர் திரைப்படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் மூட்டைப் பூச்சி கடித்ததாக அவரது டுவிட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "பிவிஆர் திரையரங்கில் ஓபன் ஹைமர் திரைப்படம் பார்த்தேன். அதற்கு பதிலாக எனக்கு இதுவே கிடைத்துள்ளது" என மூட்டப்பூச்சியிடம் கடி வாங்கிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள பிவிஆர் நிர்வாகம் அவருக்கு நேர்ந்த சிரமத்திற்கு வருந்துவதாகவும், அவரது தொடர்பு எண் மற்றும் டிக்கெட் பதிவு செய்யப்பட்ட விவரங்களையும் கேட்டு பதிவிட்டுள்ளது. இந்நிலையி்ல் இதற்கு பதிலளித்த சம்பந்தப்பட்ட நபர், ஏற்கனவே வி ஆர் மாலில் உள்ள மேலாளரிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பெருநகரங்களில் உள்ள திரையரங்கள் பார்க்கிங், உணவு, குளிர்பானங்களின் அதீத விலை ஆகிய கொள்ளைகள் அடித்து வரும் நிலையிலும் அரங்கத்தை முறையாக பராமரிக்க கூட செலவு செய்ய தயாராக இருப்பதில்லை என ரசிகர்கள் வருத்தத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க:கனமழை எதிரொலி: வானில் வட்டமடித்த விமானங்கள்!!