பிச்சைக்காரன் 2 தடைகோரிய வழக்கு... உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?!!

பிச்சைக்காரன் 2 தடைகோரிய வழக்கு... உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?!!
Published on
Updated on
2 min read

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகவுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் தடைகோரிய வழக்கின் விசாரணை ஏப்ரல் 18ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு என்ன?:

விஜய் ஆண்டனி நடித்து வெளியாகவுள்ள பிச்சைக்காரன் 2 படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த ராஜ கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அதில், தன்னுடைய மாங்காடு மூவீஸ் தயாரிப்பில் நடிகரும், இயக்குருமான ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் மூளை என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் பின்னர் ஆய்வுக்கூடம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  

இந்த படத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டு, 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் கருவானது மூளை மாற்று அறுவைச்சிகிச்சை தொடர்புடையது எனக் குறிப்பிட்டிருந்தார். 

தடை விதிக்க:

தற்போது எனது ஆய்வுக்கூடம் படத்தி்ன் கதை மற்றும் திரைக்கதையை  அப்படியே காப்பியடித்து நடிகர் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் -2’ என்ற படத்தை எடுத்துள்ளார் என்றும் அதன் டிரெய்லர் கடந்த பிப்.10 அன்று வெளியானது எனவும் கூறியுள்ள ராஜ கணபதி இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.  

மேலும் எங்களது அனுமதியின்றி ஆய்வுக்கூடம் படத்தின் கதையை மையமாக வைத்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்துள்ளதால் இப்படத்தை எந்த தளங்களிலும் வெளியிடக்கூடாது என தடை விதிக்க வேண்டும் எனவும் அத்துடன் ரூ. 10 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

விசாரணை:

இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, படம் தமிழ் புத்தான்டிற்கு வெளியாகவில்லை என்றும் மே மாதம் தான் வெளியாக உள்ளதால் படத்திற்கு தடை எதுவும் விதிக்கக்கூடாது என விஜய் ஆண்டனி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.  இதையடுத்து, வழக்கு விசாரணையை  ஏப்ரல் 18ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com