அட OTT தேவலாம் போலயே : PVR-INOX மேல் கேஸ் போட்டு வென்ற இளைஞர்!

பெங்களூரு இளைஞர் ஒருவர், "சாம் பகதூர்" திரைப்படம் தாமதமாக ஒளிபரப்பப்பட்டதற்காக PVR-INOX திரையரங்குக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். 30 நிமிடங்கள் தாமதம், அவரது வேலைகளை பாதித்ததால், நீதிமன்றம் அவருக்கு நஷ்டஈடை வழங்க உத்தரவிட்டுள்ளது.
Inox theatre case
Inox theatre issue
Published on
Updated on
2 min read

திரையரங்குகளையும், அவை சந்திக்கும் வினோதமான சில சிக்கல்களையும் பற்றி ஏற்கனவே பல செய்திகளில் நாம் படித்திருப்போம். ஆனால் திரையரங்கிற்கு வந்த இளைஞர் ஒருவர், "காலம் பொன் போன்றது" என்கின்ற விஷயத்தை மேற்கோள்காட்டி, தனக்கு டேக்கா கொடுக்க நினைத்த PVR-INOX தியேட்டரை எதிர்த்து வழக்கு தொடுத்து, அதில் இப்போது வெற்றியும் பெற்றுள்ள சம்பவம் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளைஞர் தான் அபிஷேக். இவர் கடந்த 2023ம் ஆண்டு வெளியான "சாம் பகதூர்" என்கின்ற திரைப்படத்தை காண ஆவலோடு இருந்திருக்கிறார். இந்த சூழலில் திரையரங்கில் வெளியான அந்த திரைப்படத்தை தனது நண்பர்களோடு காண முடிவுசெய்துள்ளார்.

மேலும் பிரபல "புக் மை ஷோ" செயலியின் மூலம் 3 டிக்கெட்களையும் முன்பதிவு செய்துள்ளார் அந்த இளைஞர். மாலை 4.05 மணி காட்சிக்கு அவர் புக் செய்த நிலையில், அந்த படத்தின் நீளம் 2.30 மணி நேரம் என்பதால், 6.30 மணிக்கு படம் முடிந்துவிடும் என்று நினைத்து, அதன் பிறகு தன்னுடைய சில அலுவலக வேலைகளையும் அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் இந்த இடத்தில் நான் திரில்லிங்கான அந்த விஷயமே நடந்திருக்கிறது. பொதுவாக திரையரங்கிற்கு நாம் செல்லும் பொழுது, நாம் காண சென்றிருக்கும் படம் ஒளிபரப்பப்படும் முன், விழிப்புணர்வு சம்பந்தமான விளம்பரங்கள் போடப்படுவது இயல்பான ஒன்றுதான்.

ஆனால் அந்த விளம்பரங்களும், இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்கு உள்ளதாகவே ஒளிபரப்பப்படும். ஆனால் அபிஷேக் சென்றிருந்த அந்த நாளில், சரியாக 4.05 மணிக்கு தொடங்க வேண்டிய திரைப்படம், கிட்டத்தட்ட பல திரைப்படங்களின் ட்ரெய்லர் மற்றும் ஒரு சில விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்பாகிய பிறகு சுமார் 4.30 மணிக்கு திரையிடப்பட்டிருக்கிறது.

இதனால் திட்டமிட்டபடி 6.30 மணிக்கு முடிய வேண்டிய படம், மாலை 7 மணிக்கு முடிந்திருக்கிறது. இந்நிலையில் திரைப்படத்தை திட்டமிட்ட நேரத்தில் ஒளிபரப்பாமல். நேரத்தை கடத்தி, தான் திட்டமிட்டிருந்த வேலைகள் சிக்கலை எதிர்கொள்ளும் வண்ணம் திரையரங்கம் நடந்து கொண்டது என்று கூறியும்.

அரை மணி நேரத்திற்கும் மேலாக அலுவலக பணிகளை பார்க்காததனால், தன்னுடைய நிறுவனத்திடம் இருந்து தனக்கு தண்டனை கிடைத்ததாகவும் கூறி வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார் அபிஷேக். இதற்கு எதிர்மனுவை தாக்கல் செய்த அந்த திரையரங்கம், பொதுவாக திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாக விழிப்புணர்வு விளம்பரங்களை போடுவது சட்டப்படி குற்றமல்ல என்று கூறி எதிர்வாதிட்டுள்ளது.

இறுதியில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விழிப்புணர்வு வீடியோக்களை ஒளிபரப்புவதாக இருந்தாலும், காட்சிகள் ஆரம்பிப்பதற்கு ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு முன்பே அதை ஆரம்பித்திருக்க வேண்டும். அல்லது இடைவெளி விடும் பொழுது அதனை ஒளிபரப்பியிருக்க வேண்டும்.

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் காட்சியை தொடங்காமல், 25 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது தவறு. ஆகையால் அதனால் ஏற்பட்ட நஷ்டஈடை அபிஷேகத்திற்கு கட்டாயம் கொடுத்தே தீர வேண்டும் என்று கூறி அந்த இளைஞருக்கு கிரீன் சிக்னல் காட்டி இருக்கிறது நீதிமன்றம்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com