கொரோனாவிலிருந்து மீண்ட பவானி ரெட்டி... கெட்டப்பை மாற்றிய புது வீடியோ வைரல்  

தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் பவானி ரெட்டி.
கொரோனாவிலிருந்து மீண்ட பவானி ரெட்டி... கெட்டப்பை மாற்றிய புது வீடியோ வைரல்  
Published on
Updated on
1 min read

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.

முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜு ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை தட்டிச்சென்றனர்.

 5-வது சீசன் கலந்துகொண்ட பவானி ரெட்டிக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இளைஞர்களின் கிரெஸ்சாகவும் பவானி வலம் வந்தார். 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பவானி ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். 

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தளத்தில் 
வைரல் ஆகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Pavni (@pavani9_reddy)

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com