சிம்புவிடமும், ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்ட அபிராமி..! எதற்காக தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சிம்புவிடமும் அவரது ரசிகர்களிடம் பிக்பாஸ் போட்டியாளர் அபிராமி மன்னிப்பு கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்புவிடமும், ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்ட அபிராமி..! எதற்காக தெரியுமா?
Published on
Updated on
1 min read

பிக்பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியை முதலில் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் அந்நிகழ்ச்சியை விட்டு விலகியதை அடுத்து நடிகர் சிம்பு சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கேமரா முன்பு நின்றுக்கொண்டு சிம்புவிடம் மன்னிப்பு கேட்டது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்னதான் பேசியிருப்பாங்கன்னு பாக்குறீங்களா...அதாவது அபிராமி கூறும்போது, ’எனக்கும் மற்றவர்களுக்கும் நிறைய விவாதங்கள் நடந்தன. இந்த விவாதத்தில் ஒருசிலருக்கு பேசுவதற்கு பாயிண்ட் இல்லாததால் சனிக்கிழமை சிம்பு சொன்னார்கள் என்று மாற்றி மாற்றி சொல்லி கொண்டிருந்தார்கள். அப்போது நான் சில கருத்துக்களை கூறினேன். அது சிம்புவை அவமரியாதை படுத்தியதாக யாராவது நினைத்துக் கொண்டால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சிம்புவை அவமரியாதை படுத்த வேண்டும் என்றும் அவரை இழிவுபடுத்த வேண்டுமென்ற எண்ணம் எனக்கு கிடையாது.  

நான் சிம்பு மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர்தான் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தார். அப்படி ஒருவேளை நான் அவரை அவமதித்ததாக யாராவது நினைத்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், நான் எதாவது தப்பாக பேசியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் சிம்பு என்று அபிராமி கூறியுள்ளார். இவர் இப்படி சிம்புவிடமும் அவரது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com