Bluefly: ஆஸ்கர் வென்ற நடிகருடன் பிரியங்கா சோப்ரா - எகிறும் எதிர்பார்ப்பு!

‘The Matrix Resurrections’, ‘The White Tiger’ படங்களுக்குப் பிறகு, பிரியங்கா சோப்ராவின் திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படமாக ‘Bluefly’ திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bluefly: ஆஸ்கர் வென்ற நடிகருடன் பிரியங்கா சோப்ரா - எகிறும் எதிர்பார்ப்பு!
Bluefly: ஆஸ்கர் வென்ற நடிகருடன் பிரியங்கா சோப்ரா - எகிறும் எதிர்பார்ப்பு!
Published on
Updated on
1 min read

இந்தியாவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஸ்ஸல் க்ரோவுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

‘ப்ளூஃப்ளை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், ஆக்‌ஷன் நிறைந்த அறிவியல் புனைகதை (Sci-Fi) திரைப்படமாக உருவாகிறது. இந்தப் படத்தைப் புகழ்பெற்ற ‘Predators’ படத்தின் இயக்குநர் நிம்ரோட் அன்டல் (Nimród Antal) இயக்குகிறார். இவர் பிரபலமான ‘Stranger Things’ வெப் தொடரின் சில எபிசோடுகளையும் இயக்கியுள்ளார்.

பிரியங்கா சோப்ராவுடன் நடிக்கும் ரஸ்ஸல் க்ரோவ், ‘A Beautiful Mind’, ‘Gladiator’, ‘American Gangster’ போன்ற சாதனை படைத்த திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘Gladiator’ படத்தில் அவர் ஏற்ற மேக்சிமஸ் கதாபாத்திரத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார்.

‘The Matrix Resurrections’, ‘The White Tiger’ படங்களுக்குப் பிறகு, பிரியங்கா சோப்ராவின் திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படமாக ‘Bluefly’ திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட் திரைப்படங்களிலும் வெப் தொடர்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள பிரியங்கா சோப்ரா, 2027-ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகும் ‘வாரணாசி’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூஃப்ளை படத்தின் கதை என்ன?

காங்கோ காடுகளில் நடக்கும் கதையாக உருவாகும் இப்படம், விபத்துக்குள்ளான விமானம் ஒன்றை மீட்கும் ஒரு ரகசியப் பணியில் ஈடுபடுத்தப்படும் அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் ஒருவரைப் பற்றிப் பேசுகிறது.

ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரமாகப் பயணிக்கும் சிறப்பு மீட்புக் குழுவின் பயணம் மிகவும் கடினமானதாக மாறுகிறது. விபத்துக்குள்ளான விமானத்தை நெருங்கும்போது, உண்மையில் தாங்கள் விமானத்தை மீட்பதற்காக அனுப்பப்படவில்லை என்பது அவர்களுக்குத் தெரியவருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com