லைட்டா டைட்டான டிரைவர்..! சல்லி சல்லியா நொறுங்கிப்போன பென்ஸ் கார்.. சோகத்தில் பாபி சிம்ஹா!

புஷ்பராஜிடன் மேற்கொண்ட விசாரணையில் அவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் டிரைவர் புஷ்பராஜை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
Bobby Simha car accident news
Bobby Simha car accident news
Published on
Updated on
1 min read

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பாபி சிம்ஹா. பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவரிடம் டிரைவராக பணியாற்றி வந்தவர் புஷ்பராஜ்.

இவர் பாபி சிம்ஹாவின் தந்தையை வீட்டில் விட்டுவிட்டு திரும்பும்போது மது அருந்தியுள்ளார். மதுபோதையில் வாகனத்தை இயக்கிய புஷ்பராஜ் கிண்டி கத்திபாரா அருகே வந்துகொண்டிருந்தார்.

அப்போது திடீரென கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, புஷ்பராஜிடன் மேற்கொண்ட விசாரணையில் அவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் டிரைவர் புஷ்பராஜை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

மேலும் புஜ்பராஜை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். போதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக வரும் 30 -ஆம் தேதி வரை சிறையில் அடைக்க வேண்டும் என ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com