‘பாய்காட் லைகர்!’ - இணையத்தில் ட்ரெண்டாகும் புதிய ஹாஷ்டாக் பின்னணி என்ன?

இணையத்தில், விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாக இருக்கும் லைகர் படத்தை புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
‘பாய்காட் லைகர்!’ - இணையத்தில் ட்ரெண்டாகும் புதிய ஹாஷ்டாக் பின்னணி என்ன?
Published on
Updated on
2 min read

விஜய் தேவர்கொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் தயாராகியுள்ள பான் இந்தியா படம் தான் லைகர். பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான கரன் ஜோஹரின் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாக இருக்கும், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு கமெர்சியல் சண்டை படமாக உருவாகியுள்ள இந்த படத்தில், லைகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் தேவர்கொண்டா.

அர்ஜுன் ரெட்டி மூலம் ஏற்கனவே பல வகையான அகலவை விமர்சனங்களைப் பெற்ற நடிகர் விஜய் தேவர்கொண்டா, தற்போது மீண்டும் சர்ச்சை வலையில் சிக்கியுள்ளார். தான் சிக்கியது மட்டுமில்லாமல், தற்போது, தான் நடித்த படமான லைகர் படத்தையும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளார். ஆம்! லைகர் படத்தை பாய்காட் செய்ய சொல்லி அதாவது புறக்கணிக்க சொல்லி, நெட்டிசன்கள் படு பயங்கர கோவத்தில் பதிவிட்டு, இணையத்தைத் தீப்பறக்க வைத்து வருகின்றனர். அப்படி என்ன தான் பாய்காட் செய்யும் அளவிற்கு நடந்தது என்று பார்க்கலாம்!

குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ள இந்த படத்தில், விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக, அனன்யா பாண்டே, மற்றும் லைகரின் தாயாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான ப்ரொமோஷன் படு பயங்கரமாக நடந்து வருகிறது. அந்த வரிசையில், சமீபத்தில் நடந்த லைகருக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவர்கொண்டா, மேசை மேல் செருப்பு அணிந்த கால்களை எடுத்து வைத்து அமர்ந்திருந்தார். பத்திர்க்கையாலர்களுக்கு எதிராக இப்படி செருப்பை காட்டும் வகையில் அமர்ந்திருந்தது, பலராலும் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தனது சோசியல் மீடியா பக்கத்தில், “தனது துறையில் வளர்ச்சி அடைய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் முதுகில் குத்த தான் முயற்சி செய்வார்கள். ஆனால், நாமோ போராடுவோம்! மேலும், நீங்கள் நேர்மையானவராக இருந்தால், உங்களுக்கும், உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் என்றும் நன்மையே நடக்கும். மக்களின் அன்பும், கடவுளும் உங்களைப் பாதுகாக்கும்!” என பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பல சர்ச்சைகள் அவரை சுற்றி நிரம்பி வழிய, மேலும் ஒரு சர்ச்சை அந்த பட்டியலில் இணைந்துள்ளது. சமீபத்தில், பாலிவுட் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியா பாதுகாப்பான நாடல்ல என என் முன்னாள் மனைவி கருதுகிறார் என நடிகர் அமீர் கான் கூறியதாலும், நெபோடீசன், அதாவது, வாரிசு அரசியல் செய்வதாக பல பாலிவுட் பிரபலங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்ததாலும், பாலிவுட் படங்கள் இது போன்ற பெரும் நடிகர்களின் படங்களாக இருந்தால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று பாலிவுட் ரசிகர்கள் கொந்தளித்து வந்தனர்.

அது மட்டுமின்றி சமீபத்தில் வெளியான பல தென்னிந்திய படங்கள் பான் இந்திய படங்களாக உலகம் முழுவதும் பெரும் வரவேற்புப் பெற்று பாலிவுட் படங்களின் மவுசு குறைந்து விட்டதாகவும், ஆத்திரத்தில் இருந்த ரசிகர்கள், பாலிவுட் படங்களே வேண்டாம் என்றெல்லாம் புறக்கணிக்க துவங்கினர். ஆனால், தென்னிந்திய நடிகர் மற்றும், எந்த பின்னணியும் இல்லாமல், தானாக முன்னிலைக்கு வந்த விஜய் தேவர்கொண்டாவிற்கும், அவரது புதிய ஸ்டைலுக்கு இந்தியா முழுவதும் பல ரசிகர்கள் உருவாகி இருந்தனர்.

ஆனால், தற்போது, அமீர் கான் நடிப்பில் வெளியான லால் சிங் சட்ட படத்திற்கு கிளம்பிய எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், விஜய் தேவர்கொண்டா பேசிய போது, அமீர் கானுக்கு ஆதரவளிக்கும் விதமாக பேசியுள்ளார். இது பலரது கிளர்ச்சியையும் கிளப்பியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே-வின் மகள் அனன்யா பாண்டே ஏற்கனவே நெபோடிசம் ப்ராடெக்ட் என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அவருடன் தனது அறிமுக பாலிவுட் படத்தில் நடித்திருக்கும் விஜய், அவரை போன்றவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கருதி, அவரையும் புறக்கணிக்க வேண்டும் என தற்போது, நெட்டிசன்கள் பதிவிட்டு, #BoycottLiger என்பதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அப்படி என்ன ஆதரவு?

படத்தை ரசிகர்கள் பார்க்க மாட்டேன் என புறக்கணித்தால், அது அவர்கள் விருப்பம். நாங்கல் படத்தை கொடுத்துக் கொண்டே தான் இருக்க போகிறோம். ஒரு வேளை தியேட்டர்களில் படத்தை பார்க்காவிட்டால், வீட்டு திரைக்கே சில நாட்களில் அந்த படம் வந்து விட போகிறது. பின் எதற்கு இது இவ்வளவு பெரிய சர்ச்சை ஆகி வருகிறது? என்று கேள்வி எழுப்பினார் விஜய். மேலும், ஒரு படத்தைப் புறக்கணிப்பதன் மூலம், அந்த நடிகரை மட்டுமல்ல, அந்த படத்திற்காக உழைத்த ஆயிரஜ்க்கணக்கான குடும்பங்களையும் சேர்த்து, அவர்களது உழைப்பையும் நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என விஜய் கூறியுள்ளார்.

அவர் கூறியது சரிதான் என்றாலும், அவரது தொடர் நடவடிக்கைகள் சர்ச்சைக்கு இடையில் மாட்டி வருவதால், மொத்தமாக சேர்ந்து, அவரது லைகர் படத்தை எதிர்க்க வேண்டும் என்ற பரபரப்பு சூழல் கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சையால், படத்திற்கு எப்படி பாதிப்பு வருமோ என படக்குழுவினர் பதட்டத்தில் உள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com