
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக யோகிபாபு வளர்ந்துள்ளார். அதே நேரத்தில் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். யோகிபாபு நடிப்பில் கடைசியாக வெளியான மண்டேலா திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
அதையடுத்து தற்போது பல படங்களில் யோகிபாபு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் யோகிபாபு பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்தப் படப்பிடிப்பில் யோகிபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கேக் வெட்டிக் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.