ஓ! இங்கு தான் நடக்கிறதா ‘கேப்டன் மில்லர்’ ஷூட்டிங்?

இன்று ‘கேபன் மில்லர்’ படத்தின் படபிடிப்பு துவங்கிய நிலையில், படத்தின் பூஜை நடைபெற்றது.
ஓ! இங்கு தான் நடக்கிறதா ‘கேப்டன் மில்லர்’ ஷூட்டிங்?
Published on
Updated on
1 min read

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கேப்டன் மில்லர் என்று தலைப்பிடப்பட்ட படம் உருவாக இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், உருவாக இருக்கும் இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் தற்போது படத்தின் கதாநாயகியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில், படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

தென்காசிக்கு அருகில், குடிசை வீடுகள் வைத்து செட் உருவாக்கி, அங்கு தான் ஷூட்டிங் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரசிககள், மிகக் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

படத்தின் பூஜையில், பழமையான குடிசைகள் நிரைந்த ஒரு குடிசை கிராமம் உருவாக்கப்படவுள்ளதாக அறிவித்து, அதோடு, பூஜையில், அதன் சிறிய வடிவமைப்பு பார்வையாளர்களுக்கு வைக்கப்ப்ட்டிருந்தது.

இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com