இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மீது வழக்குப் பதிவு...காரணம் என்ன?

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மீது வழக்குப் பதிவு...காரணம் என்ன?

Published on

மத உணர்வை புண்படுத்தியதாக பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், கடந்த மாதம் தனது முதல் ஆல்பம் பாடலை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி ஹைதராபாத் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தேவி ஸ்ரீ பிரசாத் வெளியிட்டுள்ள இந்த பாடலில் பக்தி பாடல்களின் துண்டுகளை பயன்படுத்தியிருப்பதாகவும், இதற்காக தேவி ஸ்ரீபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

அதனடிப்படையில், தேவி ஸ்ரீபிரசாத் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com