இந்தியன்-2 திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு

இந்தியன்-2 திரைப்படத்திற்கு  தடை கோரிய வழக்கு

இந்தியன்-2 திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் படக்குழு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி மதுரை உரிமையியல் நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

நடிகர் கமலஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 திரைப்படம் வரும் 12ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் என்பவர், இந்தியன்-1 திரைப்படத்தில், தன்னிடம் அனுமதி பெற்று வர்மகலை முத்திரையை பயன்படுத்தியதாகவும், தற்போது, இந்தியன்-2 திரைப்படத்தில் தனது அனுமதியின்றி அதே முத்திரையை பயன்படுத்தி உள்ளதால், இந்தியன்-2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வ மகேஸ்வரி, இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின், வரும் 11ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com