
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் சேலத்தை சேர்ந்த நடிகர் சரவணன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சேலம் 5 ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள திரையரங்கில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த நாடக நடிகர்களுடன் சரவணன் திரைப்படத்தை பார்த்தார்.
பின்னர் பட்டாசு வெடித்து கொண்டாடிய நடிகர் சரவணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது:-
ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கனவு இந்த படத்தில் நனவாகி உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் சின்ன கவுண்டர், தேவர் மகன் திரைப்படங்கள் வந்தபோது சாதிய பிரச்சனைகள் எதுவும் நடக்கவில்லை.
ஆனால் தற்போது நொடிக்கு நொடி செய்திகள் மக்களை சென்றடைவதாலேயே ஜாதிய பிரச்சனைகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க | சினிமா வில்லனை மிஞ்சிய திமுக கவுன்சிலர்... காவல்துறையும் உடந்தை!!