நடிகர் விஷால் புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு..!

நடிகர் விஷால் புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு..!

மார்க் ஆண்டனி படத்திற்கு திரைப்பட தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரின் பேரில், CBI வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 15ம் தேதி வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது.

இதன் டப்பிங் - திரையிடலுக்காக  மகாராஷ்டிரா தணிக்கை அதிகாரிகள் 6.5 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக விஷால் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்த நிலையில், தணிக்கை குழுவைச் சேர்ந்த மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ் உள்பட 4 பேர் மீது CBI வழக்குப்பதிவு செய்துள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com