பிரபல திரைப்பட நடிகரிடம் செல்போன் வழிப்பறிப்பு  ; வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை...

பிரபல திரைப்பட நடிகரிடம் செல்போன் வழிப்பறிப்பு  ; வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை...

Published on

சென்னையில் விக்ரம் திரைப்பட நடிகரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விக்ரம் பட நடிகன் :

அபியும் நானும், விக்ரம், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராகவும், பொன்னியின் செல்வன்,மொழி போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதியவர்  இளங்கோ குமரவேல்(57). இவர் அசோக் நகர் 12வது தெருவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இவர் விஜய் அவார்ட்ஸ்ல் சிறந்த துணை நடிகருக்கான விருதை வாங்கியுள்ளார் .இவர் தற்போது விக்ரம் திரைப்படத்தில் செய்த ரோல் தன இவருக்கு அதிக மௌசை ஏற்படுத்தியுள்ளது.பல கதாபத்திரங்களை ஏற்றும் நடிக்கும் இவர் அந்த ரோல்க்கு ஏற்றறார் போல் தன்னை வசப்படுத்தி கொள்வார்.வில்லன் ரோல்களிலும் இவர் நடித்துள்ளார்.

செல்போன் வழிப்பறி :

நேற்று குமரவேல் திரைப்பட பணிகள் தொடர்பாக எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றுவிட்டு, பின்னர் நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து வந்துள்ளார். அம்பேத்கர் மணிமண்டபம் அருகே குமரவேல் நடந்து வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குமரவேலிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். செல்போன் பறிப்பு தொடர்பாக நடிகர் குமரவேல் அளித்த புகாரின் பேரில் பட்டினம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com