
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் மற்றும் நடனக் கலைஞர் தனஸ்ரீ வர்மா ஆகியோரின் விவாகரத்து, கடந்த சில மாதங்களாக இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இருவரும் ஒருவரையொருவர் நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசாத நிலையில், அண்மையில் அவர்கள் வெளியிட்ட சில கருத்துக்கள் இந்த விவாதத்திற்கு மேலும் தீமூட்டியுள்ளன.
'பனாரஸ் ஹியூமன்ஸ்' நேர்காணல்
சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனஸ்ரீ மனம் திறந்து பேசினார். "தனிப்பட்ட வாழ்க்கை' என்று நாம் ஏன் சொல்கிறோம் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது தனிப்பட்டதாகவே இருக்க வேண்டும். ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, ஒரு கையால் தட்ட முடியாது. நான் பேசாமல் இருக்கிறேன் என்பதற்காக, அதைப் பயன்படுத்தி யாரும் தவறாகப் பேச உரிமை இல்லை. அது சரியானது அல்ல. இது யாருக்கும் நடக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
தனஸ்ரீ மேலும் கூறுகையில், எதிர்காலத்தில் தனது கதையை முழுமையாகப் பகிர்ந்து கொள்ள முடியும் என்றாலும், தற்போது தான் தனது தொழில் வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறினார். "நீங்கள் பெரிய விஷயங்களைச் சாதிக்க விரும்பினால், அதை மீண்டும் மீண்டும் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபற்றிப் பேசுவதற்கு என்னிடம் நிறைய இருக்கிறது. என் பக்கத்து நியாயமும் என்னிடம் இருக்கிறது. அதை நான் இப்போது பேச விரும்புகிறேனா என்றால், இல்லை. வருங்காலத்தில் பேச விரும்புவேனா என்றால், ஒருவேளை பேசலாம்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சஹாலின் 'மில்லியன் உணர்வுகள், பூஜ்ஜிய வார்த்தைகள்' பதிவு
தனஸ்ரீயின் இந்த நேர்காணல் வைரலான சில மணிநேரங்களுக்குப் பிறகு, யுஸ்வேந்திர சஹால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய பதிவை வெளியிட்டார். அதில், சில படங்களைப் பகிர்ந்த சஹால், “Million feelings, zero words” (மில்லியன் உணர்வுகள், பூஜ்ஜிய வார்த்தைகள்) என்று தலைப்பிட்டிருந்தார். சஹாலின் இந்த தலைப்பு, தனஸ்ரீயின் பேச்சுகளுக்கு அவர் மறைமுகமாகப் பதிலளிக்கிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
சஹால் இதற்கு முன்பு ஒரு நேர்காணலில், விவாகரத்து வழக்கு நடந்தபோது தன்னை சிலர் துரோகி என்றும், ஏமாற்றுபவர் என்றும் விமர்சித்ததாகவும், அது தன்னை மனதளவில் மிகவும் பாதித்ததாகவும் கூறியிருந்தார். மேலும், தன்னுடைய உறவு மிகவும் தனியானது என்றும், அதைப் பற்றிப் பேச தனக்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருந்தாலும், இப்போது அது தேவையில்லை என்றும் தனஸ்ரீ தனது நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இவர்கள் இருவரின் விவாகரத்து கடந்த மார்ச் மாதம் முடிவுக்கு வந்தது. கொரோனா காலத்தில் டான்ஸ் கற்றுக்கொள்ள தனஸ்ரீயை அணுகிய சஹால், பின்னர் அவரை காதலித்து 2020-ல் திருமணம் செய்துகொண்டார். தங்கள் உறவு குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்த இந்த ஜோடி, பிரிந்த பிறகும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவகாரத்தில், ரசிகர்கள் பலரும் இருவருக்கும் ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.