சிங்கராக அவதாரம் எடுத்த சந்தானம்... என்ன பாட்டு தெரியுமா?

சிங்கராக அவதாரம் எடுத்த சந்தானம்... என்ன பாட்டு தெரியுமா?

‘கிக்’ என்ற படத்திற்காக முதன்முறையாக சொந்தக் குரலில் முதன் முறையாக பாடி நடிகர் சந்தானம் பாடகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
Published on

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் கிக். இவருடன் தன்யா ஹோப், ராகினி திவேதி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.  இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

அதில் "சாட்டர்டே இஸ் கம்மிங்கு..."  (Saturday is cominguu) என்று ஆரம்பிக்கும் பாடலை முதல் முறையாக நடிகர் சந்தானம் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். இப்பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார். இப்பாடலின் முழு வரிகளுக்கான வீடியோ அக்டோபர் 10ஆம் தேதி மாலை 06.03 மணிக்கு வெளியாகவுள்ளது.

பல ஹிட் படங்களை கன்னடத்தில் கொடுத்து விட்டு இந்த படம் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார் பிரசாந்த் ராஜ். நமக்கு இருக்கும் கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம் என அனைத்து துயரங்களையும் மறந்து சிரித்து, சந்தோஷமாக பொழுது போக்கும் படமாக தான் சந்தானத்தின் "கிக்" படம் இருக்கப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தில், பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்களான, ‘டாம் மற்றும் ஜெர்ரி’ போல தான் இந்த படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் என தெரிவித்த இயக்குனர், குறுக்கு வழியில் சென்று, தான் வேலை செய்யும் விளம்பர நிறுவனத்தில், எப்படி வெற்றி பெறுவது என்பது தான் கதையின் களமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

இந்த படத்தில், சந்தானத்திற்கு ஜோடியாக 'தாராள பிரபு' நாயகி தான்யா ஹோப், நேர்மையாய் விளம்பரத் துறையில் முன்னேற துடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இரண்டு பேரும் எலியும் பூனையுமாக மோதி கொள்ளும் வகையில் உருவான இந்த கதை, சந்தானத்தை  விரும்பி பார்ப்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார் இயக்குனர்.

காமெடி, சென்டிமென்ட், டிராமா என எல்லாம் கலந்து உருவாகி இருக்கும் ஜனரஞ்சகமான இப்படத்தில், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரா, மொட்டை ராஜேந்திரன், ஷகிலா, ராகிணி திவேதி, வையாபுரி, சிசர் மனோகர், கிங்காங், முத்துக்காளை, சேஷு, கூல் சுரேஷ், அந்தோணி என பலர் நடித்திருக்கின்றனர்.

கன்னடத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அர்ஜுன் ஜன்யா தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவரது புதுமையான இசையில், இந்த படம் ஐந்து பாடல்கள் கொண்டு உருவாகியுள்ளது. கன்னடத்தில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்தாலும், சந்தானம் படம் அதுவும் தமிழ் என்பதால், மிகவும் அதீத ஆர்வத்துடன் படத்திற்காக் அதனது உழைப்[பைப் போட்டிருப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஒரு பாடல் சந்தானம் பாடியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் குஷியான செய்தியாக் ஆமைந்துள்ளது.

சமீபத்தில், ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ‘குளு குளு’ படத்தில் நடித்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த சந்தானத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு இந்த செய்தி மூலம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com