"CM Vijay என் Lucky Charm".. சமந்தாவின் பேச்சும், ரூ.220 கோடி வெற்றியும்.. இரட்டை சந்தோஷத்தில் நடிகை!

சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரின் திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது. இப்போது அவர்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்துள்ளனர்.
 "CM Vijay is My Lucky Charm": Samantha Opens Up on Blockbuster Success, Upcoming Baby, and Politics
"CM Vijay என் Lucky Charm".. சமந்தாவின் பேச்சும், ரூ.220 கோடி வெற்றியும்.. இரட்டை சந்தோஷத்தில் நடிகை!
Published on: 
Updated on: 
1 min read

முன்னணி நடிகை சமந்தா இப்போது சோனி விழா சேனலின் சமையல் நிகழ்ச்சியில் தோன்றி வருகிறார். சமீபத்திய எபிசோடில் அவருக்கு விருப்பமான ஹீரோ பற்றி கேட்கப்பட்டபோது முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசியுள்ளார்.

"அவர் என் லக்கி. நான் அவருடன் மூன்று சூப்பர்ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளேன்." எனப் பேசியுள்ளார் சமந்தா.

விஜய் - சமந்தா இணை நடிப்பில் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய 3 திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இவை மூன்றுமே 100 கோடி கடந்து வசூல் செய்தது. மெர்சல் திரைப்படம் 250 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

சினிமா மட்டுமல்லாமல் விஜய்யின் அரசியல் குறித்தும் பேசினார் சமந்தா, "ஒரு மனிதராக அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தும், ஒரு தலைவராக இருக்கவும், ஆட்சி நிர்வாகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். அமைதியாகவும், கவனமாகவும், திரைக்குப் பின்னால் மிகவும் கடினமாகவும் உழைக்கிறார். தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் நுழைவது ஒரு எளிதான முடிவு அல்ல." எனப் பேசியுள்ளார் சமந்தா.

செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சி சோனி விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

கடைசியாக மா இன்டி பங்காரம் என்ற தெலுங்கு படத்தை தயாரித்து முதன்மை பாத்திரத்தில் நடித்த சமந்தா, கர்ப்பமாக இருப்பதனால் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துள்ளார்.

சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரின் திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது. இப்போது அவர்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்துள்ளனர்.

சமாந்தாவின் கடைசி படமான மா இன்டி பங்காரம், திரையில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது அவர் இணை நிறுவனராக உள்ள சீக்ரட் அல்கெமிஸ்ட் என்ற வாசனை திரவிய நிறுவனம் 120 கோடிக்கு மேல் வருவாய் பெற்றுள்ள செய்தியும் வந்துள்ளது.

இந்த இரட்டை வெற்றி குறித்து பதிவு செய்துள்ள சமந்தா, "முற்றிலும் மாறுபட்ட இரண்டு பயணங்கள் இத்தகைய அர்த்தமுள்ள மைல்கற்களை எட்டுவதைக் காண்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. 'மா இன்டி பங்காரம்' என் இதயத்தில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு படைப்பு, அதேசமயம் 'சீக்ரெட் அல்கெமிஸ்ட்' என்பது, எங்கள் தொலைநோக்குப் பார்வையை ஆழமாக நம்பும் ஒரு குழுவுடன், அடிமட்டத்திலிருந்து ஒரு நிறுவனத்தை உருவாக்கும் ஒரு பயணமாகும்.

எங்களை இங்கு கொண்டு வந்த அன்பு, நம்பிக்கை மற்றும் ஆதரவிற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன். இந்த மைல்கற்கள், எல்லைகளைத் தாண்டிச் செல்லவும், மக்களுடன் ஒன்றிப்போகும் படைப்புகளை உருவாக்கவும் என்னை ஊக்குவிக்கின்றன." எனக் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com