ஜெய்பீம் படத்தை நேர்மையாக இயக்கியிருந்தால் நல்லா இருந்திருக்கும் - லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து

ஜெய் பீம் படத்தின் உண்மைக் கதையை நேர்மையாக எடுத்திருந்திருக்கலாம். ஆனால் படம் எடுத்தவர்கள் அதை செய்யவில்லை என இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜெய்பீம் படத்தை நேர்மையாக இயக்கியிருந்தால் நல்லா இருந்திருக்கும் - லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து
Published on
Updated on
1 min read

கடந்த 2- தேதி ஓடிடி தளத்தில் வெளியாகியான படம் ஜெய் பீம். நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சூர்யா உட்பட, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஷிசா விஜயன் உட்பட பலர் நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 1990-களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இருளர் இன மக்கள் படும் பாட்டையும், அவர்களது இன்னல்களையும் தெரிவித்திருப்பார்கள்.

ஜெய்பீம் படத்தில் ஒரு காட்சியில் வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசம் காட்டப்பட்டதாக வன்னியர் சங்கத்தினர் படக்குழுவினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது

அது போல் உண்மைக்கதையில் இன்ஸ்பெக்டரின் பெயர் வேறு மதத்தினரின் பெயராக இருக்கும் நிலையில் படத்தில் அவருக்கு குருமூர்த்தி என சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகிறது. இதுகுறித்து நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஜெய்பீம் படத்தின் உண்மை கதை நேர்மையாக இயக்கியிருந்தால் அந்த படம் சிறந்த உத்வேகமளிக்கக் கூடிய படமாக இருந்திருக்கும். ஆனால் உண்மைக் கதைக்கு புறம்பாக எடுக்கப்பட்டுள்ளது.

உண்மையாக கடலூரில் ராஜக்கண்ணுவுக்கு எதிராக நடந்த போலீஸ் அராஜகத்திற்கு எதிராக ஜாதி, மத பேதமின்றி பொதுமக்கள் ஒன்று திரண்டனர். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட ஜாதியை தவறாக சித்தரிப்பதை தவிர்த்திருக்கலாம். உண்மைக் கதையை படமாக எடுக்கும் போது ஒரு படத்திற்கு எப்போதும் விவரித்தல் என்பது மிகவும் முக்கியம்.

ஆனால் தவறாக விவரித்திருப்பது ஆக்கப்பூர்வமானது அல்ல, பாதிப்பைத்தான் ஏற்படுத்தும் என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது போல் நிறைய பேர் ஜெய்பீம் குறித்து அவர்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com