போபால் மக்கள் பற்றி சர்ச்சை கருத்து? - ”தி காஷ்மீர் பைல்ஸ்” திரைப்பட இயக்குனர் மீது புகார் !

”தி காஷ்மீர் பைல்ஸ்” திரைப்பட இயக்குனர் மீது புகார் !
போபால் மக்கள் பற்றி சர்ச்சை கருத்து? -  ”தி காஷ்மீர் பைல்ஸ்” திரைப்பட இயக்குனர் மீது புகார் !
Published on
Updated on
1 min read

போபால் மக்களை தரக்குறைவாக விமர்சித்ததாக ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்பட இயக்குனர்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 1990களில் காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் அடித்து விரட்டப்பட்ட சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’.

விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இத்திரைப்படத்திற்கு பாஜக உள்பட பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், அதற்கு எதிர்மறையான கருத்துக்களையும் அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் இப்படம் தொடர்பாக கலந்துரையாடலில் பேட்டியளித்த இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, தான் போபாலை சேர்ந்தவன் என்றும், ஆனால் அங்குள்ள மக்கள் ஓரினசேர்க்கையாளர்கள் என பெரிதும் அறியப்படுவதால், அவ்வாறு கூறிக்கொள்ள விரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.  இந்தநிலையில் அவரது  சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com