சர்ச்சைக்குறிய புகைப் பிடிக்கும் ‘காளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் பரபரப்பு:

சர்ச்சைக்குறிய புகைப் பிடிக்கும் ‘காளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் பரபரப்பு:
Published on
Updated on
2 min read

பிரபல LGBTQIA+ ஆதரவாளராக இருக்கும் சுயாதீன இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான லீனா மணிமேகலை பல படங்களை எடுத்து, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக பல சர்ச்சைக்குறிய யாரும் தொடாத தலைப்புகளில் இவர் எடுக்கும் பல ஆவணப் படங்கள், நாடளவிலும், உலக அளவிலும் கவனத்தைப் பெற்றது. அவர் இயற்றிய பரை, செங்கடல், மாடத்தி போன்ற படங்கள் தான் அவரது புகழை பரவி விட்டது.

மதுரையில் பிறந்து, டொராண்டோவில் திரைப்படத் தயாரிப்பாளராக வலம் வரும் லீனா, தனது படங்களில் LGBTQIA+ குறித்து பல ஆதரவுக் கோரும் படங்களை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மேலும் ஒரு ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார் லீனா. காளி என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை 2ம் தேதி வெளியாகி பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளை சந்தித்தது. சர்ச்சைகளைக் கிளப்பிய இந்த போஸ்டரில், இந்து மதக் கடவுள்களில் ஒருவராகப் போற்றப்படும் காளி தெய்வத்தின் உடைகளை அணிந்த பெண் ஒருவர், ஒரு கையில் LGBTQIA+ -வின் கொடியைப் பிடித்தது போலவும் மறுகையில், சிகெரட்டைப் பிடித்து புகை விடுவது போலவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது அந்த போஸ்டர். இதனால், தங்களது கடவுளையும் மதத்தையும் அவமதிபதாகக் கொந்தளிக்கும் நெட்டிசன்கள் இவரது காளி படைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய லீனா, “காளி என்பவள் - வேட்டை சமூகங்கத்தின் கடவுள். ஊருக்கொரு பிடாரி, ஏரிக்கொரு அய்யனார் என சொலவடை உண்டு. நம் ஊரில் பச்சைக்காளி, பவளக்காளி, கருங்காளின்னு பிடாரி போன்ற பல கடவுள்கள் அனைத்து இடங்களிலும் உள்ள நிலையில், அந்தக் காளி டோரோண்டோ நகரத்தில வலம் வந்தால் என்ன நடக்கும் என்பதை சொல்லும் படம் தான் என் `காளி' படம். இன்று என்னை எதிர்த்து வெறுப்பு பதிவுகள் போடும் இவர்கள் தான் நாளை எனக்கு ஆதரவு பதிவுகளும் போடுவார்கள்.” என கம்பீரமாக பதிலளித்தார்.

இவர் இப்படி சொன்னாலும், மக்கள் பலராலும் இந்த போஸ்டரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இணைய வாசிகளின் வெறுப்புகளைச் சேர்த்து வரும் காளி இயக்குனர், தனது படத்தின் வெளியீடு எப்படி செய்யப்போகிறார் என்ற கேள்விகள் கிளம்பியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com