
பணப்பிரச்சினையால் குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதால் கொட்டும் மழையிலும் இரவு பகல் பாராமல் தானும், தனது மனைவியும் படத்தை வெளியிட பெருமுயற்சி எடுத்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், பைனான்சியர் உத்தம்சந்திடம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்பாக 5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதம் அளித்ததாகவும் . ஆனால் தங்களிடம் சொல்லாமல் சாட்டிலைட் விற்பனை நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து பைனான்சியர் உத்தம்சந்த், தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.