AK64: மீண்டும் அஜித் x ஆதிக் கூட்டணி - வருகிறான் 'டேர் டெவில்'!

குட் பேட் அக்லி படத்துக்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் டேர் டெவில் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
AK64: மீண்டும் அஜித் x ஆதிக் கூட்டணி - வருகிறான் 'டேர் டெவில்'!
Published on
Updated on
1 min read

ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே நடிகர் அஜித் குமாரின் 64-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்துக்கு 'டேர் டெவில்' (Dare Devil) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை 'பிரேவ் ஹார்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Adhik
Ajith Adhik

முன்னதாக, ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் கூட்டணியில் கடந்த 2025-ம் ஆண்டு வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது.

குட் பேட் அக்லி படத்துக்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் டேர் டெவில் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

'குட் பேட் அக்லி' படத்தின் ஒளிப்பதிவாளர் அபினந்தன் ராமானுஜம், இந்தப் படத்திலும் பணியாற்றவுள்ளார்.

கடந்த ஆண்டு 'குட் பேட் அக்லி', 'விடாமுயற்சி' என இரண்டு படங்களில் நடித்திருந்த அஜித், அதன்பிறகு கார் பந்தயம் உள்ளிட்ட பிற துறைகளில் கவனம் செலுத்தி வந்த நிலையில், ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

AK64: மீண்டும் அஜித் x ஆதிக் கூட்டணி - வருகிறான் 'டேர் டெவில்'!
தனது ‘Crush’ பற்றி பேசிய மமிதா பைஜூ… “நிறைய பேருடைய கனவுலதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்!” - கஜினி பட நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சி

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com