’ லியோ’ படத்தின் நான் வரவா" பாடலை யூடியுப் உள்ளிட்ட அனைத்து சமூக வளைத்தளங்களில் இ௫ந்தும் நீக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் தெரிவித்துள்ளார்.
’லியோ’ படத்தின் ”நான் வரவா" பாடல் தொடர்பாக தயாரிப்பாளர், இயக்குநா், இசையமைப்பாளா், பாடலாசிாியா், பாடகா், பாடலை வெளியிட்ட சோனி நிறுவனம் மற்றும் நடிகா் விஜய் ஆகியோா் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும், யூடியுப் உள்ளிட்ட அனைத்து சமூக வளைத்தளங்களில் இ௫ந்தும் இந்த பாடலை நீக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக ஆர்டிஐ செல்வம் தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டதாவது:-
” 27.06.2023 தேதியிட்ட "லியோ " திரைப்படத்தில் "அண்ணன் நான் வரவா" பாடல் தொடர்பாக சமூக ஆர்வலர் ஆர்டிஐ. செல்வம் அளித்த புகார் தொடர்பாக, பொதுக் கண்காட்சிக்காக, மேற்கண்ட பாடலுக்கு, இதுவரை சான்றளிக்கவில்லை என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கூறியுள்ளது.
தணிக்கை வாரிய அதிகாரி தி௫.பாலமுரளி அவர்களின் கடிதத்தை பாா்ககும் போது, லியோ திரைப்பட குழு தணிக்கை வாரியத்தை மதிக்காமல் அத்துமீறி செயல்படுவது போல் தோன்றுகிறது..
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் அனுமதி இல்லாமல் இளைஞா்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும்படி எடுக்கப்பட்ட பாடலை முன் கூட்டியே சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு நடிகா் விஜயின் ரசிகா்கள் மட்டுமின்றி பெறுவாாியான இளைஞா்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்பட செய்த லியோ படத்தின் தயாரிப்பாளர், இயக்குநா், இசையமைப்பாளா், பாடலாசிாியா், பாடகா், பாடலை வெளியிட்ட சோனி நிறுவனம் மற்றும் நடிகா் விஜய் ஆகியோா் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும், யுடியுப் உள்ளிட்ட அனைத்து சமூக வளைத்தளங்களில் இ௫ந்தும் மேற்கண்ட பாடலை நீக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது”.
இவ்வாறு தணிக்கை வாரியத்தின் கடிதத்தை முன் நிறுத்தி சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகிறார்.
இதையும் படிக்க | "மகளிர் உரிமைத்தொகை - நடைமுறைக்கு வருமா?" - ஈபிஎஸ் கேள்வி!