ரூ.22 கோடிக்கு ஆடம்பர சொகுசு பங்களாவை வாங்கிய தீபிகா-ரன்வீர் சிங்....

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதி மும்பையில் கடற்கரை ஏரியாவான அலிபாக் பகுதியில் ரூ.22 கோடிக்கு ஆடம்பர சொகுச பங்களாவை வாங்கி உள்ளனர்
ரூ.22 கோடிக்கு ஆடம்பர சொகுசு பங்களாவை வாங்கிய தீபிகா-ரன்வீர் சிங்....

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் அழகில் மட்டுமல்ல அவருடைய தோற்றத்திலும் எல்லார் மனதையும் கிறங்கடிக்க கூடியவர். அவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் மற்றவர்களை விட தனித்துவமாக ஜொலிப்பவர்.

இதற்கிடையில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதி மும்பையில் கடற்கரை ஏரியாவான அலிபாக் பகுதியில் ரூ.22 கோடிக்கு ஆடம்பர சொகுச பங்களாவை வாங்கி உள்ளனர். 2.25 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த சொத்தில் 18 ஆயிரம் சதுர அடிக்கு வீடு உள்ளிட்ட கட்டடங்கள் உள்ளது.

கடற்கரை பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளதால், பல தொழிலதிபர்களும், திரை நட்சத்திரங்களும் இந்தப் பகுதியில் சொத்துக்களை வாங்கி வருகின்றனர்.நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் தற்போது மும்பையில் உள்ள பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இது தவிர இவர்களுக்கு மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் சொத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com