தேவா - விஜய் காம்போ.. ‘ஐயையோ அலமேலு’ முதல் 'தங்க நிறத்துக்கு' வரை.. முதலமைச்சரை முதன்முதலாக பாடவைத்த கதை தெரியுமா?

தேவா - விஜய் காம்போ.. ‘ஐயையோ அலமேலு’ முதல் 'தங்க நிறத்துக்கு' வரை.. முதலமைச்சரை முதன்முதலாக பாடவைத்த கதை தெரியுமா?
Deva & Vijay Combo: From 'Aiyayoo Alamelu' to 'Thanga Nirathukku' – The Story Behind Making the Chief Minister Sing for the First Time
தேவா - விஜய் காம்போ.. ‘ஐயையோ அலமேலு’ முதல் 'தங்க நிறத்துக்கு' வரை.. முதலமைச்சரை முதன்முதலாக பாடவைத்த கதை தெரியுமா?
Published on: 
Updated on: 
1 min read

இன்று தமிழக முதலமைச்சராக இருக்கும் விஜய், நடிகராக மட்டுமல்லாமல் சினிமாவில் பாடகராகவும் பல ஹிட்களை கொடுத்திருக்கிறார்.

அவருடைய கடைசி படமான ஜனநாயகனில் கூட செல்ல மகளே என்ற பாடலைப் பாடினார். அவரது அரசியல் கட்சிக்கான பாடல்களைக் கூட அவரது குரலிலேயே பாடினார். இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர் இன்று மறைந்திருக்கக் கூடிய இசையமைப்பாளர் தேவா.

விஜய்யின் படங்கள் என்றாலே அதன் பாடல்களுக்கு தனித்த வரவேற்பு கிடைக்கும். ஆரம்ப காலத்திலேயே இதற்கு அஸ்திவாரம் போட்டவர் தேவா.

ரசிகன், தேவா, விஷ்ணு, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், ப்ரியமுடன், நினைத்தேன் வந்தாய், மின்சாரக் கண்ணா, குஷி என விஜய் படங்களில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் தேவா.

ரசிகன் படத்தில்  ‘பாம்பே சிட்டி’ என்ற துள்ளலான பாடல்தான் விஜய் முதன்முதலில் பாடியது. அதுவும் தேவாவின் இசையில்! இந்த பாடலின் ரெக்கார்டிங் குறித்து சமீபத்தில் நினைவுகூர்ந்த தேவா, விஜய் 30 நிமிஷத்தில் தயாராகி, ஒரு மணி நேரத்துக்கு பாடியதாக வியந்து கூறினார்.

தேவா படத்தில்  ‘ஐயையோ அலமேலு’ பாடல் இவர்கள் காம்போவில் ஹிட் ஆனது. அதெப்போல விஷ்ணு படத்தில் வந்த 'தொட்டபெட்டா ரோட்டு மேலே' பாடலும் மக்களை சென்றடைந்தது.

இதைத் தவிர இவர்கள் இருவரும் பணியாற்றிய அனைத்து படங்களிலும் விஜய் குரலில் ஒரு பாடல் வெளியானது.

  • காலமெல்லாம் காத்திருப்பேன் (1997): அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி

  • ஒன்ஸ்மோர் (1997): ஊர்மிளா ஊர்மிளா

  • பிரியமுடன் (1998): மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா

  • நினைத்தேன் வந்தாய் (1998): மனிஷா மனிஷா

  • நெஞ்சினிலே (1999): தங்க நிறத்துக்கு

    'தங்க நிறத்துக்கு' பாடல் இன்றளவும் ரசிக்கப்படும் ஒன்றாக உள்ளது.

தேவா மரணத்துக்கு, "தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்." என வருந்தியுள்ளார் முதல்வர் விஜய்.

அத்துடன் அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com