“இறுதிச்சடங்கிலும் ஒலித்த தேவாவின் இசை!” - ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலுக்கு இப்படி ஒரு சிறப்பா? சிங்கப்பூர் முன்னாள் அதிபரின் கடைசி ஆசை!

சிங்கப்பூரின் 6-வது அதிபராகப் பதவி வகித்த எஸ்.ஆர். நாதன் என அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதனுக்கு, ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல் மிகவும் பிடித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
“இறுதிச்சடங்கிலும் ஒலித்த தேவாவின் இசை!” -  ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலுக்கு இப்படி ஒரு சிறப்பா? சிங்கப்பூர் முன்னாள் அதிபரின் கடைசி ஆசை!
Published on: 
Updated on: 
1 min read

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்த தேவா, பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் நினைவுகூரப்படும் பாடல்களை வழங்கியுள்ளார். அந்த வகையில், சேரன் இயக்கத்தில் வெளியான பொற்காலம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இந்தப் பாடல் தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி, வெளிநாட்டில் வாழ்ந்த ஒரு முக்கியப் பிரமுகரையும் வெகுவாகக் கவர்ந்திருந்தது.

சிங்கப்பூரின் 6-வது அதிபராகப் பதவி வகித்த எஸ்.ஆர். நாதன் என அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதனுக்கு, ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல் மிகவும் பிடித்திருந்ததாகக் கூறப்படுகிறது. கரணம் பல்வகை மண்ணைக் கொண்டு பொம்மை செய்வது போல, சிங்கப்பூர் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்டு உருவான நாடு என்ற கருத்துடன் இந்த பாடலை அவர் ரசித்ததாக சொல்லப்படுகிறது. தேவாவின் இசையில் உருவான இந்தப் பாடல் மீது அவர் கொண்டிருந்த விருப்பம், அவரது இறுதி சடங்கில் ஒலிக்க செய்யும் அளவுக்கு இருந்தது.

தான் உயிரிழந்த பிறகு நடைபெறும் இறுதிச்சடங்கில், தனக்குப் பிடித்தமான ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலை இசைக்க வேண்டும் என்று எஸ்.ஆர். நாதன் தனது மரண சாசனத்தில் எழுதி வைத்திருந்திருக்கிறார். அதன்படி, அவர் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி உயிரிழந்தபோது, அவரது உடல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (NUS) உள்ள பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் (University Cultural Centre - UCC) வைக்கப்பட்டது. இங்குதான் பிரதமரின் இரங்கல் உரைகளும், அரசு மரியாதைகளும் நிகழ்ந்தன அப்போது இறுதிச்சடங்கில் அவரது விருப்பத்தின் படி பொற்காலம் படத்தின் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இப்படி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்களை வழங்கிய தேவாவின் மறைவு, தமிழ் திரையுலகிற்குப் பேரிழப்பாக அமைந்துள்ளது. ஒரு பாடல், மொழி மற்றும் நாட்டின் எல்லைகளைக் கடந்து, சிங்கப்பூரின் முன்னாள் அதிபரின் இறுதி விருப்பத்திலும் இடம்பெற்றது என்பது தேவாவின் இசைக்குத் கிடைத்த தனித்துவமான அங்கீகாரமாகும். காலங்கள் மாறினாலும், தேவா இசையமைத்த பாடல்கள் ரசிகர்களின் நினைவுகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அவர் மறைந்தாலும், தனது இசையின் மூலம் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com