நானும் -  அவரும் ஒரே பிரேமில் இருந்தால் எப்படி இருக்கும்..? தனுஷ் ஓபன் டாக்

நானும் -  அவரும் ஒரே பிரேமில் இருந்தால் எப்படி இருக்கும்..? தனுஷ் ஓபன் டாக்
Published on
Updated on
1 min read

தமிழ் சினிமாவின் முன்ணனி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது தி கிரே மேன், அட்ராங்கி ரே மற்றும் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. 

இதில் தி கிரே மேன், அட்ராங்கி ரே ஆகிய இரண்டு படங்களும் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதில் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி அக்ஷய் குமாருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள அட்ராங்கி ரே ஹிந்தி படம் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷிடம், அக்ஷய் குமரை தொடர்ந்து வேறு எந்த ஹிந்தி பட ஹீரோவுடன் நடிக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு, ரன்பீர் கபூர் என்று தெரிவித்திருக்கிறார் தனுஷ். அவரும் நானும் ஒரே பிரேமில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை அறிவதற்கு ஆவலாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com