ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வைரல் !

தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள தனுஷின் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வைரல் !
Published on
Updated on
1 min read

நானே வருவேன், திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது 'வாத்தி', படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ், தற்போது 'தி கிரே மேன்'  படத்தை இயக்கியுள்ளனா்.

இப்படத்தில்,  கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் இவர்களுடன் இணைந்து தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில்  'தி கிரே மேன்' படத்தின் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் பகிர்ந்துள்ளார். மேலும் ஜூலை மாதம் 22-ஆம் தேதி நெட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக இப்படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com