தனுஷின் 'ராயன்' படத்திற்கு 'ஏ' சான்றிதழ்

தனுஷின் 'ராயன்' படத்திற்கு 'ஏ' சான்றிதழ்

நடிகர் தனுஷ் நடிக்கும் ராயன் படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ராயன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த நிலையில், படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ராயன் படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com