சிம்பு படத்தை 'லாக்' செய்த டைனோசர்ஸ் இயக்குநர்?

'டைனோசர்ஸ்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவுடன் இணைகிறார் இயக்குநர் எம்.ஆர்.மாதவன்
சிம்பு படத்தை 'லாக்' செய்த டைனோசர்ஸ் இயக்குநர்?

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான கேங்ஸ்டர் திரைப்படம் டைனோசர்ஸ்.வடசென்னை பின்னணியில் உருவான இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கிருந்தார்.எதிர்பார்ப்புகளின்றி வெளியான இந்த படத்திற்கு விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து,ரசிகர்களின் வரவேற்பும் கிடைத்தது.

இந்த நிலையில், இயக்குநர் எம்.ஆர்.மாதவன் அடுத்ததாக நடிகர் சிம்புவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தை பிரபல வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது.இதற்கு முன்னர், சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com