மீண்டும் இணையும் சற்குணம்-அதர்வா..! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு..!

சண்டிவீரனுக்கு பிறகு மீண்டும் இணையும் கூட்டணி..!
மீண்டும் இணையும் சற்குணம்-அதர்வா..! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு..!
Published on
Updated on
1 min read

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகளுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில், கிராமத்தில் நடக்கும் ஒரு அழகான காதல் கதையான களவாணி, செங்கல் சூளையில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறிய வாகை சூடிய போன்ற படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் சற்குணம். 

பெரிய அளவிலான மெகா ஸ்டார் ஹீரோ, ஹீரோயின்கள் இல்லாமல் நடுத்தரமான ஹீரோ, ஹீரோயின்களை கொண்டு கதைக்கு கச்சிதமாக அவர்களை பொருத்தியிருப்பார் சற்குணம். இவர் தற்போது நடிகர் அதர்வாவை வைத்து ஒரு புது படத்தை தொடங்கியுள்ளார். இந்த கூட்டணி ஏற்கனவே சண்டிவீரன் படத்தில் இணைந்து பணியாற்றிய நிலையில், தற்போது மீண்டும் இணைந்துள்ளது. 

பெயரிடப்படாத இந்தப் படத்தில், ராஜ்கிரண், ராதிகா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சென்னையில் பூஜையுடன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com