
துள்ளுவதே இளமை படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தை முதல் படைப்பாக உருவாக்கினார்.
பொதுவாகவே தனுஷ், செல்வராகவன் கூட்டணி என்றாலே அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இவர் மற்ற இயக்குனர்களிடமிருந்து சற்று வித்தியசமாக காணப்படுவார்.
இவருடைய ஒவ்வொரு படைப்பும் சற்று வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் இருக்கும்.செல்வராகவன் அவ்வப்போது வாழ்க்கை தத்துவத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவார்.
இந்நிலையில், இது தொடர்பாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில். வாழ்க்கையில் மிகக் கொடுமை“ என்ன பாத்துக்க யாருமே இல்லையே “” என்ற புலம்பல்தான். உங்களை எதற்கு “ஒருவர் ‘ பார்த்துக் கொள்ள வேண்டும் ? அது மருத்துவமனையில் நோயாளியாய் இருப்பது போல.! உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அது கடவுளே உங்களை பார்த்துக் கொள்வது போல். ! என்று பதிவிட்டுள்ளார்