அடுத்த புதிய சீரிஸை அறிவித்தது டிஸ்னி+ஹாட்ஸ்டார்...!

அடுத்த புதிய சீரிஸை அறிவித்தது டிஸ்னி+ஹாட்ஸ்டார்...!
Published on
Updated on
1 min read

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் “பாராசூட்” சீரிஸை கோலாகலமாக அறிவித்துள்ளது!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  இயக்குநர் ஶ்ரீதர்.K இயக்கத்தில், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஒரிஜினல் வெப் சீரிஸான  “பாராசூட்” சீரிஸை அறிவித்துள்ளது.

நடிகர் கிருஷ்ணாவின் தயாரிப்பு நிறுவனமான ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. நடிகர் கிருஷ்ணா டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்காக தயாரிக்கும் இரண்டாவது சீரிஸ் இதுவாகும்.

பல சூப்பர்ஹிட் படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கிய நடிகர் ஷாம், பன்முக திறமை கொண்ட நடிகர் கிஷோர் மற்றும் நடிகை கனி ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த மூவருடன், திறமைவாய்ந்த குழந்தை நட்சத்திரங்களான சக்தி மற்றும் இயல் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன், பிரபல நடிகர்கள் VTV கணேஷ், பாவா செல்லதுரை முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார். மேலும், கலை இயக்குநராக ரெமியன் பணியாற்ற, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை அமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com