இந்த 11 செயலிகளை பயன்படுத்தாதிங்க… எச்சரிக்கும் கூகுள்!  

ஸ்மார்ட் போன்களில் உள்ள 11 செயலிகளில் ஜோக்கர் மால்வேர் உள்ளதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என கூகுள் எச்சரித்துள்ளது.
இந்த 11 செயலிகளை பயன்படுத்தாதிங்க… எச்சரிக்கும் கூகுள்!   
Published on
Updated on
1 min read

ஸ்மார்ட் போன்களில் உள்ள 11 செயலிகளில் ஜோக்கர் மால்வேர் உள்ளதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என கூகுள் எச்சரித்துள்ளது.

ஸ்மார்ட்போன்களை பாதிக்கும் ஆபத்தான மால்வேர் பரவல் சம்பவங்கள் வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் மோசமான ஜோக்கர் மால்வேர் மீண்டும் தனது வேலையை காட்டியுள்ளது. அதாவது பிளே ஸ்டோரில் மொத்தம் 11 ஆண்ட்ராய்டு ஆப்களில் ஜோக்கர் மால்வேர் பரவியிருப்பதை சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக இந்த தகவலை முதலில் வெளியிட்டது ZDNet என்பது குறிப்பிடத்தக்கது. ஜோக்கர் மால்வேர் பொதுவாக பயனர்களின் முக்கியத் தகவலை திருடும். அதாவது தனிப்பட்ட தரவைத் திருடுகின்றன, சாட்கள் மற்றும் பிற பயன்பாடுகளைப் பார்க்கின்றன. மேலும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளின் விவரங்களை கூட இந்த ஜோக்கர் மால்வேர் திருடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே Free Affluent Message, PDF Photo Scanner,  delux Keyboard, Comply QR Scanner, PDF Converter Scanner, Font Style Keyboard, Translate Free, Saying Message, Private Message, Read Scanner, Print Scanner ஆகிய 11 ஆப்களில் ஜோக்கர் மால்வேரை கண்டறிந்ததும் கூகுள் நிறுவனம் அதன் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com