தளபதி 67 படத்தை இயக்க போவது யார் தெரியுமா..? வெளியான சைலண்ட் தகவல்?

தளபதி 67 படத்தை இயக்க போவது யார் தெரியுமா..? வெளியான சைலண்ட் தகவல்?

தளபதி விஜய்
Published on

நடிகர் விஜய்-யின் 65 வது படமான "பீஸ்ட்" படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி, படத்தை இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், "தளபதி 67" படத்தை யார் இயக்க போகிறர் என அவ்வப்போது தகவல் கசிந்து வருகிறது.

அந்த வகையில், தளபதி 67 படத்தை அட்லி இயக்கப்போவதாகவும், அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்தன. எனினும், கமல் ஹாசனின் "விக்ரம்" படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் படத்தை தான் இயக்க போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தளபதி 66 படத்தின் பட பிடிப்பு கூட இன்னும் ஆரம்பிக்காத நிலையில், 'தளபதி 67' படம் குறித்து தகவல் அவ்வப்போது கசிந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com