லிட்டர் ரூ 5000க்கு விற்பனையாகும் கழுதை பால்...!

லிட்டர் ரூ 5000க்கு விற்பனையாகும் கழுதை பால்...!

கோவில்பட்டியில் கழுதை பால் ஒரு சங்கு பால் ரூ 70க்கும், ஒரு லிட்டர் பால் ரூ.5000 க்கும் ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கழுதை பால் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. கழுதை பாலில் மருத்துவக்குணம் இருப்பதாக கூறி பொது மக்கள் குழந்தைகளுக்கு ஆர்வமுடன் வாங்கி கொடுக்கின்றனர். இந்நிலையில் ஒரு சங்கு பால் ரூ 70க்கும், ஒரு லிட்டர் பால் ரூ.5000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கழுதை பால் குடிப்பதால் இருமல், சளித்தொல்லை நீங்கி ஜீரணம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகாரிக்கும் என நம்பபப்படுகிறது. இதனால் கிராமங்களில் கழுதை பாலை குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கழுதை பால் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டி ஜோதி நகர், ஸ்டாலின் காலனி, சுப்பிரமணியபுரம், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரது தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் 10 கழுதைகளை வைத்து கழுதை பால் விற்பனை செய்து வருகின்றனர். 

ஒரு சங்கு கழுதை பால் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் கழுதை பால் ரூபாய் 5000க்கு விற்பனை செய்யபடுகிறது. மேலும் கழுதை முடியினால் செய்யப்பட்ட தாயத்தும் 70ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இது தவிர கழுதையிடம் மூச்சு பிடிக்கவும் 70 ரூபாய் வசூல் செய்கின்றனர். அப்பகுதி மக்கள் குழந்தைகள் உடல் நலன் மேம்படும் என்று கூறி பொதுமக்கள் ஆர்வமுடன் கழுதை பால் வாங்கி கொடுத்து வருகின்றனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com