பல்வேறு திரைப்படங்களில் நடித்து, வேறுபட்ட மொழி, மாறுபட்ட கதைக்களம் இவற்றை நடித்து ரசிகர்களை மத்தியில் இடம்பிடித்த ரம்யா கிருஷ்ணன் சினிமா துறையில் இருக்கும் 'காஸ்டிங் கௌச்' பற்றி ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழி படங்களில் தன் கால்தடத்தை பதித்தவர்தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். ராஜ மாதாவாக தற்போது பலராலும் அறியப்படுகிறார். தனது 'ஸ்வாகான ஸ்டைலால்' 90's காலத்திலேயே அனைவரது மனங்களிலும் ஒரு தனித்துவமான இடம் பிடித்தவர் என்றே கூறலாம். அந்த இடத்தினை இன்று வரை தக்கவைத்துக்கொள்ளவும் அவர் தவறவில்லை என்றுதான் கூறவ வேண்டும். தற்போது இவர், சினிமா துறையில் நடக்கும் பாலியல் சுரண்டல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லை என்று கூறமுடியாது. ஆனால், இது பொழுதுபோக்கு துறைக்கு மட்டுமே உரியது இல்லை என்றும் அவர் பேசியுள்ளார்.
சமீபத்தில், 'ரா டாக்ஸ் வித் வி.கே' என்ற பாட்காஸ்டில் கலந்துகொண்டார். அதில், ரம்யா கிருஷ்ணனிடம் "திரைப்படத் துறையில் 'காஸ்டிங் கௌச்' (பாலியல் சுரண்டல்) உள்ளதா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் எப்ஸ்டீன் விவகாரத்தை மேற்கோள் காட்டி, பெண்கள் சமூக ரீதியாக அதிக அதிகாரம் பெற்றவர்களாகக் கருதப்படும் நாடுகளில்கூட இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “எப்ஸ்டீன் கோப்புகளைப் பாருங்கள். பெண்கள் மிகவும் துணிச்சலாக இருக்கும் ஒரு இடத்தில்கூட நடந்துள்ளது. எனவே, இது இங்கே நடக்காது என்று உங்களால் கூற முடியாது. அது நடக்கிறது, அது நடந்தது, அது நடக்கும்.
ஆனால், அது எப்படி நடந்தது?, ஆம் அல்லது இல்லை என்று நீங்கள் சொல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதா? என்பது காலப்போக்கில் மாறும்,” என்று அவர் கூறினார். மேலும், "வற்புறுத்தல், விருப்பம் அல்லது சாதாரணமாக கூட சுரண்டல் நிகழலாம். எங்களது தொழில் கவர்ச்சியானது என்பதால் அது வெளியில் பேசப்படுகிறது. ஆனால், வெளியில் சினிமா துறையில் இல்லாமல் எத்தனையோ பேர் இதே பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். 'காஸ்டிங் கௌச்' என்பது தவறான ஒரு சொல். இது எல்லா துறைகளிலும் பாலின வேறுபாடின்றி நடைபெறுகிறது" என்று அவர் மனந்திறந்து பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.