பிரபல நடிகை திடீர் மரணம்! 30 வயதிலேயே முடிந்த உயிர்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! என்ன நடந்தது?

புகழின் உச்சியில் இருக்கும்போது அவர் மறைந்ததை யாராலும் நம்ப முடியவில்லை என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்..
திவ்யங்கா சிரோஹி
திவ்யங்கா சிரோஹி
Published on
Updated on
1 min read

ஹரியான்வி இசை மற்றும் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையும், சமூக வலைதள நட்சத்திரமுமான திவ்யங்கா சிரோஹி தனது 30 வயதிலேயே காலமான செய்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் பிறந்த இவர், தனது அபாரமான நடிப்பு மற்றும் நடனத் திறமையால் குறுகிய காலத்திலேயே ஹரியான்வி இசைத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். காசியாபாத்தில் உள்ள ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வந்த இவர், திடீரென உயிரிழந்தது அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் மீளாத் துயரத்தில் தள்ளியுள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திவ்யங்காவிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்ததைக் கண்ட அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்தத் திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது கலைப்பயணத்தில் 50-க்கும் மேற்பட்ட ஹரியான்வி ஆல்பம் பாடல்களில் திவ்யங்கா நடித்துள்ளார். குறிப்பாக, பிரபல பாடகர் மாசூம் சர்மாவுடன் (Masoom Sharma) அவர் இணைந்து பணியாற்றிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தவை. திரையில் அவரது துடிப்பான நடிப்பு மற்றும் அழகான முகபாவனைகள் ஹரியானா மட்டுமின்றி வட மாநிலங்கள் முழுவதும் அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. ஆல்பம் பாடல்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் அவர் ஒரு மிகப்பெரிய இன்ஃப்ளூயன்சராகத் திகழ்ந்தார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்த திவ்யங்காவிற்கு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான (1.3 Million) ஃபாலோயர்கள் உள்ளனர். அவ்வப்போது தனது க்யூட்டான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த அவரது சமூக வலைதளப் பக்கத்தில், இப்போது ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு சிறிய வயதில், அதுவும் புகழின் உச்சியில் இருக்கும்போது அவர் மறைந்ததை யாராலும் நம்ப முடியவில்லை என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

மறைந்த நடிகை திவ்யங்காவின் இறுதிச் சடங்குகள் காசியாபாத்தில் உள்ள மோக்ஷ் ஸ்தல் ஹிண்டன் மயானத்தில் இன்று காலை 9:30 மணியளவில் நடைபெற்றது. அவரது சகோதரர் ஹிமான்ஷு சிரோஹி இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்தினார். திரையுலகைச் சேர்ந்த பலரும், சமூக வலைதளப் பிரபலங்களும் நேரில் வந்து திவ்யங்காவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com