பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார்!!

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்.
பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார்!!
Published on
Updated on
1 min read

 பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் கொச்சியில் இன்று காலமானார். அவருக்கு வயது 61.

அவரது மறைவு கேரள திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு கேரள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

2001ஆம் ஆண்டு தனது 40வது வயதில் ஐ.வி. சசி இயக்கிய ‘ஈ நாடு இன்னலே வரே’ படத்தின் மூலம் திரையுலகின் அறிமுகமான கோட்டயம் பிரதீப் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜ ராணி, நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com