‘வாரிசு’ படம் வெற்றி பெற அன்னதானம் வழங்கிய ரசிகர்கள்...

விஜய் நடிக்கும் வாரிசு படம் வெற்றி பெற விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
‘வாரிசு’ படம் வெற்றி பெற அன்னதானம் வழங்கிய ரசிகர்கள்...
Published on: 
Updated on: 
1 min read

செங்கல்பட்டு | சிங்கபெருமாள் கோயில் அருகே உள்ள நரிசிமம் பெருமாள் கோவிலில் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தொண்டர் அணி மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் வரும் பொங்கல் அன்று வெளி வர உள்ள வாரிசு படம் வெற்றி பெற சிறப்பு பூஜை நடத்தினர்.

இந்நிலையில் இந்தப் திரை படம் வெற்றிபெற வேண்டியும், விஜய் நீண்ட காலம் வாழ வேண்டியும் அர்ச்சனை செய்தனர். விஜய் ரசிகர்கள், கோவில் வளாகத்தின் 100க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு அன்னதானம் செய்தனர்.

இதுகுறித்துப் ரசிகர்கள் பேசுகையில், விஜய் அண்ணா நீண்ட காலம் வாழ வேண்டும் மென்மேலும் சினிமா துறையில் வளர வேண்டும், என்றும் வாரிசு திரை படத்தை காண மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com