புஷ்பா படத்தின் ஆடியோ கேட்காததால் சேர்களை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்...

புஷ்பா திரைப்படத்தின் ஆடியோ சரியாக கேட்காததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ரகளை
புஷ்பா படத்தின் ஆடியோ கேட்காததால் சேர்களை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்...
Published on
Updated on
1 min read

திருப்பதியில் புஷ்பா திரைப்படத்தின் ஆடியோ சரியாக கேட்காததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கின் சேர்களை அடித்து நொறுக்கிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மரக் கடத்தலை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இப்படம் நேற்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

இந்த நிலையில் திருப்பதியில் புஷ்பா திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கு ஒன்றில் ஆடியோ சரியாக கேட்காததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் உட்கார்ந்திருந்த சேர்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் ரசிகர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com