நிரபராதிகளைத் தேடி தேடி காப்பாற்றும் புதிய படைப்பு, ‘ஃபைண்டர்’...

சென்றாயன் மற்றும் சார்லீ நடிப்பில் உருவாக இருக்கும் ‘ஃபைண்டர்’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.
நிரபராதிகளைத் தேடி தேடி காப்பாற்றும் புதிய படைப்பு, ‘ஃபைண்டர்’...
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில், பல் அவகையான குற்றப்பிரிவுகள் உள்ளன. யார் என்றாலும் எவர் என்றாலும் கராரான கட்டுப்பாடுகளும் சட்ட அமைப்புகளும் உள்ளன. ஆனால், அவற்றில் சில வழக்கு பதிவுகள் அவசரத்திலும், போதாத ஆதரங்களாலும், எதிர்மறையான ஆதாரங்களினாலும் தவறான நபர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

இந்திய சட்டப்படி, ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்ற சட்டம் அங்கு இல்லை போலும். பல முறை வாய்தா வாங்குவதற்கு தண்டனை அனுபவித்து விட்டு வந்து விடலாம் என்ற போக்கில் பல அப்பாவிகள், பல நிரபராதிகள் ஜெயிலில் வாழ்க்கையைக் கடத்தும் ஒரு அவலம் நடந்து வருகிறது.

இதனைத் தடுக்க “தி இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட்” என்ற பெயரில் ஒரு நிறுவனம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆதாரங்களை சேகரித்து, அவர்கள் மீதான குற்றம் உண்மை தானா இல்லை, தவறாக குறம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனரா என கண்டுபிடித்து அவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுத் தருகின்றனர்.

ஆனால், இது போலவே இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இருந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும்? அப்படி ஒரு கதை தான் “ஃபைண்டர்ஸ்”. வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில், அரபி ப்ரொடக்‌ஷன்ஸ்- ராகீஃப் சுப்ர்டமணியம் மற்றும் வியான் வென்சர்ஸ் - வினோத் ராஜேந்திரன் இணை தயாரிப்பில் இந்த படம் உருவாக இருக்கிறது.

சென்றாயன் சார்லீ ஆகியோர் நடிப்பில் உருவாக இருக்கும் ‘ஃபைப்டர்ஸ்’  படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த படத்திற்காக அனைவரும் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com