“நேரம் மட்டும் வீணாகிக்கொண்டே இருக்கு … ஆனா எந்த வேலையும் செய்யலையா..!? குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லித்தர வேண்டிய Hobbies !!

விஞ்ஞானி -யான ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் தனது ஓய்வு நேரத்தில் வயலின் வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாராம். ..
best hobbies for the students
best hobbies for the students
Published on
Updated on
3 min read

நமது இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே அவசரகதி தான். நமக்கென்று  ஆக்கபூர்வமான மணித்துளிகளை நாம் எப்படி பாய்படுத்துகிறோம் என்பது அவசியம் , ஏனெனில் நேரத்தை கையாளுவதுகூட ஒரு கலைதான். குறிப்பாக பள்ளி பருவத்திலேயே ஆக்கபூர்வமான பொழுபோக்கு பழக்கங்கள் அவர்களுக்கு எதிர்காலத்தை சிறப்பாக்க வல்லது. சாதனை மாந்தர்கள் அனைவரின் வாழ்விலும் அப்படி ஒரு பொழுதுபோக்கு இருப்பதை நம்மால் பார்க்க முடியும். மிக முக்கியமான விஞ்ஞானி -யான ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் தனது ஓய்வு நேரத்தில் வயலின் வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாராம்.   நமக்கு பலவிதமான பொழுபோக்குகள் இருக்கலாம்  இள வயது பிள்ளைகளுக்கு தேவையான சில பொழுபோக்குகள் பற்றியும்  அவற்றின் பயன்கள் பற்றியும் இந்த கட்டுரையில் காண்போம்.

மாணவர்களுக்கு  ஏற்ற சிறந்த பொழுதுபோக்குகளின் உதாரணங்களைப் பார்க்கும் முன், பொழுதுபோக்குகள் தரும் நன்மைகள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை முதலில் பார்ப்போம்.

  1. ஒரு புகழ்பெற்ற ஆராய்ச்சி அமைப்பின்  தகவல்படி, பொழுதுபோக்குகளில் ஈடுபடுவோர் மரண அபாயத்தை சுமார் 50% வரை குறைத்துக்கொள்ள  முடியும் .ஒரு பொழுதுபோக்கை செய்து முடிக்கும்போது எதோ ஒரு வேலையை முழுமையாக (sense of accomplishment) முடித்த அனுபவத்தை வழங்குகிறது.

  2. மாணவர்களுக்கு ஏற்ற பொழுதுபோக்குகளில் அவர்கள் தொடர்ந்து இயங்கும்போது திறன் வளர்ச்சி மேம்படுகிறது. மேலும் கடிவாளம் கட்டிய குதிரையாய்  இல்லாமல் பல்வேறு விருப்பத் துறைகளை ஆராய வாய்ப்பளிக்கும்.

  3. மற்றொரு , இந்தியர்களில் 44% பேர் தங்களுக்கான மிகப்பெரிய மகிழ்ச்சியை தங்கள் பொழுதுபோக்குகளில் தான் பெறுகிறார்கள் என தெரிவித்துள்ளது 

இந்தியா மாதிரியான நாட்டில் பொழுதுபோக்கின் தேவை என்ன?

 இந்தியா  முரண்கள் நிறைந்த ஒரு “Paradoxical Society” இங்கே மக்கள் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற ஒருவரிடம் மட்டும் அனுமதி கேட்கவோ,  போராடுவதோ மிக சிக்கலான விஷயம் ஆகும்.. பெரும்பான்மையான நேரங்களில் அந்த போராட்ட களம்  நமது குடும்பமாகவோ,, அல்லது இந்த சமூகமாகவோ தான் இருக்கிறது.  இந்த சூழலில் குழந்தைகளை ஆக்கபூர்வமாக சிறந்த மனிதர்களாக வளர்ப்பது பெற்றோரின் முக்கிய கடமையாகும்.  ஆகவே இந்த சமூக முரண்களிலில் இருந்து விடுபட்டு மனதுக்கு நிறைவான தருணங்களை வளரும் இளம் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.  

 அதுவும் இந்த AI யுகத்தில் மாணவர்கள் தேவையற்ற மன சிக்கல்களால்  பீடிக்கப்படுகின்றனர், மாணவர்களின் மன நலம் பெரும்பாலான நேரங்களில் புறக்கணிக்கப்படுகிறது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் மாணவர்கள் பல காரணங்களால் அதிக மன அழுத்தத்தில் வாழ்கிறார்கள். ஆனால் அந்தக் காரணங்களை நாம் பலர் பார்க்கவோ தெரிந்துகொள்ளவோ  விரும்பவில்லை என்பதே நிதர்சனம். மாணவர்கள் பெரும்பான்மையான நேரங்களை செலவிடும் கல்வி  நிறுவனங்களே அதை இன்னும் மோசமாக்கிவிடுகின்றன. மாணவர்களை அழுத்தும் பெற்றோர்கள்!

மாணவர்கள் மீது பெற்றோர்கள் வைக்கும் அதீத எதிர்பார்ப்புகள் அவர்களை உளவியல் ரீதியான அழுத்தத்தை அதிகரிக்கிறது.  எடுத்துக்காட்டாக கல்வியிலும், இணைச்செயற்பாடுகளிலும் மாணவர்கள் எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் செழிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர்கள் இதை செய்தாலும் பெரும்பான்மையான நேரங்களில் அது மாணவர்களுக்கு உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்துகிறது. 

ஆனால், தெரியுமா? பெற்றோர் எதிர்பார்ப்புகள் தான் மாணவர்களுக்கு மிக பெரிய மன அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  1. சமீபத்தில் நடந்த ஒரு கணக்கெடுப்பில், சுமார் மூன்றில் இருவர்  தங்கள் பெற்றோர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று அழுத்தம் தருகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.

  2. 2018ஆம் ஆண்டில், மொத்தமாக பதிவான 1,30,000 தற்கொலை சம்பவங்களில் 8% மாணவர்கள் தான்.

மாணவர்களுக்குப் பொருத்தமான பொழுதுபோக்குகளைத் தேர்வு செய்வது ஒரு சிறந்த ஓய்வு முறையும், மகிழ்ச்சியான அனுபவமும் ஆகும். மாணவர்களுக்கு ஏற்ற பொழுதுபோக்குகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பதை பார்க்கலாம்…

1.சிறுவயதில் உங்களை ஈர்த்த விஷயத்தை நினைவு கூறுங்கள்:
சிறு  பிள்ளையாக இருந்த போது நீங்கள் அதிகம் ஈர்க்கப்பட்ட செயல்கள் எவை?என்பதை நினைவு கூர்ந்து அதனை மீண்டும் உங்கள் அன்றாடத்திற்குள் கொண்டுவர முயலுங்கள்.

2. உங்கள் விருப்பங்களை முதன்மைபடுத்துங்கள்:
உங்களுக்கு ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளில் ஈடுபாடு உண்டா என்பதை கவனியுங்கள் ? எடுத்துக்காட்டாக, புகைப்படக் கலை, புதிய மொழிகளை கற்றல் ஆகியவை உங்களின் எதிர்கால தொழிமுறை வாழ்வு மேம்படவும் உதவும்.

3. புதியவற்றைத் திறந்த மனதுடன் ஏற்க பழகுங்கள்;
புதிய செயல்களைச் செய்யப் பயப்பட வேண்டாம்! சுவாரசியமான புதுப்புது விஷயங்களை தேடித்தேடி அணுகுங்கள். 

4. நீங்கள் Team Player  என்பதை பரிசீலியுங்கள்:
உங்களுக்கு மற்றவர்களுடன் கலந்துரையாடுவது பிடிக்குமா அல்லது அமைதியான நேரத்தை தனிமையில் செலவழிக்க விரும்புகிறீர்களா? என்பதை ஆய்வு செய்யுங்கள். 

5. மகிழ்ச்சியை முன்னிலைப்படுத்துங்கள்:
நிபுணராக மாற வேண்டிய அழுத்தமெதுவும் இல்லை. உங்களுக்கு சோர்வில்லாத ஓய்வையும், முழுமையான  உணர்வையும் கொடுக்கும் ஒன்றை செய்தலே  போதும்!

ஊக்கம் தரும் பொழுதுபோக்குகள்!

வலை பதிவு -Blogging 

நீங்கள் தொடர்ந்து இணையத்தில் எழுதுவது மிகவும் ஆக்கபூர்வமான படைப்பாற்றல் திறனை தரவல்லது. தொடர்ந்து நீங்கள் எழுதும்போது உங்கள் உள்ளார்ந்த உணர்வுகளுக்கு ஒரு வடிவத்தை தருகிறீர்கள். தொடர்ந்து இணையத்தில் எழுதும்போது, சமூக உறவு, சோசியல் மீடியாக்களில் பொது தொடர்பை வளர்க்க அதன் மூலம் வருவாய் ஈட்டுதல் வரை பல நற்பயன்கள் உண்டு.

புனைவு (அ) படைப்பாற்றல் எழுத்து - creative writing 

கவிதை, கதையாக்கம் போன்ற படைப்பாற்றலை தூண்டும்  எழுத்துகள், மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமான பொழுதுபோக்குகள் ஆகும்.

வலைப்பதிவைப் போலவே,  உங்களின் எழுத்துக்கள்  எதிர்கால தொழில்முறை வாழ்வுக்கு உதவிகரமாக இருக்கும்.

பொது தொடர்பு, மார்கெட்டிங், வடிவமைப்பு, பத்திரிகை,  அல்லது சமூக ஊடகத் துறைகளில் வேலை செய்ய விரும்புவோருக்கு, இப்படைப்பு எழுத்துப் பழக்கம் மிகவும் பயனளிக்கக்கூடியது.

தன்னார்வ தொண்டு - Volunteering 

தன்னார்வ சேவை (Volunteering) என்பது மாணவர்களுக்கு ஏற்ற சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். இதன் மூலம், ஒரு நபர் குழுவோடு இணைந்து பணியாற்றக்கூடியவரா என்பதை அறிந்து கொள்ள இயலும்.

பல நிறுவனங்கள் குழு வேலை (teamwork) என்பதை மிக முக்கியமாகக் கருதுகின்றன. குறிப்பாக, விற்பனை (sales) மற்றும் விளம்பரத் துறையில் (advertising) வேலை செய்ய விரும்புகிறவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

புகைப்படக் கலை (Photography)

நீங்கள் பத்திரிகை, சமூக ஊடகம், அல்லது திரைத்துறையில்  வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்றால், புகைப்படக் கலை உங்களுக்கு ஏற்ற தேர்வு. படிக்கும் மாணவர்களுக்கு இந்தக் கலை மனநலத்தையும் சமூக உணர்வையும்  மேம்படுத்த உதவக்கூடும்.

இதைவிட சிறந்த விஷயம் என்னவென்றால் இதனால்  மாணவர்களுக்கு கிடைக்கூடிய passive icome எனப்படும் இயல்பான வருமானம் சீரான முறையில் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.

புது மொழியை கற்றல் 

புதிய மொழியை கற்றுக்கொள்வது மாணவர்களுக்காக மிகவும் பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். இது அவர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்க அதிகமாக உதவுவதோடு, நினைவுத்திறன், அறிவாற்றலை அதிகரிக்கிறது.

பல வேலைவாய்ப்பு வல்லுநர்களுக்கு, இருமொழி அறிவு (bilingualism) என்பது ஒரு கூடுதல் மதிப்பாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஒரு  புதிய மொழியை கற்கும்போது அந்த மொழியின் கலாச்சாரம், அதை பேசும் மக்களின் வரலாறு மற்றும் வாழ்வியல், நிலப்பரப்பு சார்ந்தும் கற்றுக்கொள்கிறீர்கள்  என்பது கூடுதல் சிறப்பு.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com