முதல்ல - துணிவா... வாரிசா? சண்டை போட்ட ரசிகர்கள்... திண்டாடிய தியேட்டர்

ஒரே தியேட்டரில் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியாக இருப்பதால் எந்த படம் முதலில் வெளியாகும் என இரு தரப்பு ரசிகர்களும் சண்டை போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்ல - துணிவா... வாரிசா? சண்டை போட்ட ரசிகர்கள்... திண்டாடிய தியேட்டர்

தேனி | படத்தின் வெற்றி, படம் எத்தனை பணம் வசூலித்தது என்பதில் மட்டுமல்ல, அந்த படத்தின் வரவேற்பு மக்கள் மத்தியில் எப்படி இருக்கிறது என்பதிலும் தான். குறிப்பாக பெரிய நடிகர்கள், நட்சத்திரங்களின் படங்கள் ரசிகர்களால் எப்படி கொண்டாடப்படுகிறது என்பதில் தான் படத்தின் மார்க்கெட்டே முடிவு செய்யப்படுகிறது என சொல்லலாம்ம்.

அந்த வகையில், அதீத அளவில் அன்பு கொண்ட ரசிகர்களைக் கொண்ட முன்னணி நடிகர்கள் தான் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார். அவர்களது ரசிகர்கள் அந்தந்த நட்சத்திரங்களை எப்படி கொண்டாடுகிறார்களோ அதையும் தாண்டி அதிகமாக, அவர்களது போட்டி நடிகர்களுக்கு எதிராக பெரிதாக சண்டைகளும் செய்வதுண்டு.

அதிலும், தற்போது பொங்கலன்று, விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் வரும் 11ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் முழுவதும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் முன்பாக பேனர்கள் கட் அவுட்டுகள் வைத்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் உள்ள வெற்றி திரையரங்கில் இரண்டு படமும்  காட்சிப்படுத்தப்பட உள்ளது.

போடியில் உள்ள மூன்று திரையரங்கில் இரண்டு திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் படங்கள் தனித்தனியே வெளியிடப்பட உள்ள நிலையில் இந்த வெற்றி திரையரங்கில் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியிடப்பட உள்ளதால் இதில் முதல் காட்சியாக எந்த திரைப்படம் வெளியிடுவது என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது.

இரு தரப்பு ரசிகர்களும் ஆன்லைனில் 11ஆம் தேதி காலை 5 மணி முதல் காட்சியை காண்பதற்காக துணிவு வாரிசு இரண்டு படங்களுக்குமே புக்கிங் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரு திறப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.

போடி நகர் காவல் துறையினர் தலையிட்டு தியேட்டர் உரிமையாளர்களிடமும் இருதரப்பு ரசிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்ஒரு தியேட்டரில் இரண்டு படங்களும் வெளியிடப்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதன் காரணத்தால் காவல்துறையினர் ஒரு படத்தை மட்டும் வெளியிட தியேட்டர் உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக எந்த படம் திரையிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் இரு தரப்பு ரசிகர்களும் பேனர் வைத்துக் கொண்டு தியேட்டரை முற்றுகையிட்டுள்ளனர் இதனால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com