இதெல்லாம் எதுக்கு? வந்தோமா சம்பாதிச்சமா... - கஞ்சா கருப்பு

ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் மோகன் ஜி, நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இதெல்லாம் எதுக்கு? வந்தோமா சம்பாதிச்சமா... - கஞ்சா கருப்பு
Published on
Updated on
1 min read

மேடையில் நடிகர் கஞ்சா கருப்பு பேசியபோது, “ஒரு நாள் தயாரிப்பாளராக இருந்து பாருங்கள், அப்போது தெரியும் அதன் கஷ்டம்.” என தனது பேச்சை துவங்கினார்.

மேலும் பேசிய அவர், “நான் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து தோல்வியடைந்த போது,  எனது அம்மாவிடம் தெரிவித்த போது, அவர் சொன்னார், நீ காசு கொடுத்து படிக்காத படிப்பை, சினிமாவில் நீ காசை கொடுத்து படித்துள்ளாய்.” என என்னை தேற்றி விட்டார்.

தொடர்ந்து, தற்போது நடந்து வரும் பிரச்சனை குறித்து பேசிய போது, “இன்று பிரச்சனை செய்கிறார்கள், ராஜ ராஜ சோழன் இந்துவா முஸ்லிமா என்று, எதற்கு இதெல்லாம், படத்தை எடுத்தோமா, சம்பாதிச்சமா என்று இருக்கணும். அதெல்லாம் தேவை இல்லாத விஷயம்.” என கூறினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

மேலும், சமீபத்தில் வெளிநாடுகளிலும் மாநிலங்களிலும் ஷூட்டிங் செய்யும் இயக்குனர்கள் குறித்து பேசும் போது, “வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தும் இயக்குனர் நடிகர்களுக்கு நம்ம ஊரில் இருக்கும் ஊர்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? அவர்கள் ஊரில் பள்ளிக்கூடம் கட்டினால் நம்ம பிள்ளைகளுக்கு இலவசமாக விடுவார்களா? அதனால் அயல்நாட்டில் பணத்தை போடாதீர்கள்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர் நடிகை இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு 1 லட்சம் ரூபாய் பணம் கேட்டதற்கு அவரை ஆபாசமாக திட்டி கடிந்தார் நடிகர் கஞ்சா கருப்பு.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com