‘புல்லட்டு’ ராமுக்கு ‘ப்ளடோனிக்’ காதல் கதையா?

‘புல்லட்டு’ பாடலால் தமிழ் மக்களுக்கு மத்தியில் பிரபலமான ராம் பொத்தினேனி, கௌதம் மேனனுடன் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது!!!
‘புல்லட்டு’ ராமுக்கு ‘ப்ளடோனிக்’ காதல் கதையா?
Published on
Updated on
2 min read

வித்தியாசமான கதைக்களத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய நடிகர், “ராம் பொத்தினேனி”. தற்போது அவர் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் தன்னுடைய புதிய படத்திற்காக இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து, தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில், புதிய படம் ஒன்றிற்காக அடுத்த வருடம் இருவரும் இணைய இருப்பதாக கௌதம் உறுதி செய்திருக்கிறார். மேலும், இந்த கதை, வித்தியாசமான, ஆர்வமூட்டும் கதைக்களமாகவும் இருக்கும் எனவும் கெளதம் மேனன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் ஸ்ரவந்தி ரவி கிஷோர் தனக்கும் ராம் பொத்தினேனிக்கும் ஒரு பொது நண்பராக நீண்ட காலமாக இருந்து வருவதையும் கெளதம் மேனன் குறிப்பிட்டுள்ளார். தீவிரமான கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட ‘வெந்து தணிந்தது காடு’ (தெலுங்கில் ‘தி லைஃப் ஆஃப் முத்து’) படத்தினை தெலுங்கில் ஸ்ரவந்தி மூவிஸ்ஸின் ஸ்ரவந்தி ரவி கிஷோரால் வெளியிடப்படுகிறது.

கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே பொதுவாக ஸ்டைலிஷ், மாடர்ன் த்ரில்லர் கதைகளே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில், தீவிரமான ஆக்‌ஷன் கதைக்களத்தை சிம்புவுடன் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கொடுத்து இருக்கிறார் அவர்.

சமீபமாக, ராம் பொத்தினேனியும் வழக்கமான மாஸ் ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் இருந்து விலகி வரும் நிலையில், கெளதம் மேனன் – ராம் பொத்தினேனி கூட்டணியில் கதைக்களம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. தற்போது, Boyapati Rapo என்ற படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், இரண்டு படங்கள் குறித்தான விவரம் அடுத்தடுத்து வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com