பிரபாஸ் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி! பிரமாண்ட படத்தின் அடுத்த பாகம்...

பிரபாஸ் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி! பிரமாண்ட படத்தின் அடுத்த பாகம்...

கேஜிஎஃப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கினார்.ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்த இப்படத்தில் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர்கள் தவிர்த்து ஈஸ்வரி ராவ்,ஸ்ரியா ரெட்டி,பாபி சிம்ஹா,மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.கடந்த ஆண்டு டிச.22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும்,வசூல்ரீதியாக ரூ.600 கோடி வரை கல்லா கட்டியது.

இதைத்தொடர்ந்து,பிரபாஸ் நடிப்பில் கல்கி திரைப்படம் கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியாகி ரூ.600 கோடியைத் தாண்டி வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில்,சலார் 2 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆக.10ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதல் பாகம் எடுத்தபோதே 20% படப்பிடிப்பை எடுத்திருந்த நிலையில்,தற்போது படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

சலார் 2 முடிந்தவுடன் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 'டிராகன்' படத்தை எடுக்கவுள்ளார் பிரஷாந்த் நீல்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com